Wednesday, February 24, 2016

பத்தேமாரி - மளையாள பட விமர்சனம்

தாய்க்கு அடுத்து தலைமகன் தாயுமானவன் என்று அழுத்தம் திருத்தமாக சொல்லும் படம்.

கிட்டதட்ட சுவர் இல்லாத சித்திரங்கள், வறுமையின் நிறம் சிகப்பு, நிழல்கள் வகையான படைப்பு இந்த படம்.

குடும்பத்தில் வறுமை, தகப்பன் இல்லாத குடும்பம். இந்த நிலையில் குடும்ப பொருப்பை சுமக்கும் கடன் தலைமகனுக்கு விதிக்கப்படுகின்றது.

என்ன செய்வது என்று தெரியாமல் துபைக்கு கள்ள தோனியில் பயணிக்கிறார் நாராயணன், அங்கே சென்றதும் கப்பலில் இருந்து குதித்து கடலில் நீந்தி கரை சேர்ந்து இரவில் கூட்டதோடு கூட்டமாக கலந்து துப்புரவு பணியாளாய் வேலையை தேடிக்கொண்டு கிடைக்கும் சம்பளத்தை குடும்பத்திற்காக கொடுக்கும் ஒரு மெழுகு வர்த்தியின் வாழ்க்கையை வாழ்கிறார் நாராயணன்.

அரும்பு மீசையுடன் அரபு நாட்டிற்கும் வரும் அவன் கிட்டதட்ட ஒரு 30 வயதில் முதல் முறையாக இந்தியாவிற்கு வருகிறான். வருபவனுக்கு மேலும் மேலும் கடன் சுமைகளை குடும்பம் ஏற்றுகிறது.

மேலே ஏற்றிய சுமையை அடைக்க மறுபடியும் துபை பயணம். அங்கே மேலும் இருக்கும் நாட்களில் இடையில் அவனது தாய் மரிக்கிறார். சொன்னால் எங்கே வந்துவிட போகிறான் என்று 4 நாட்கள் கழித்து தாமதமாக தெரியப்படுத்தும் காட்சி மனதை பிசைந்து எடுக்கின்றது.

இந்த நிகழ்வுக்கு பிறகு யோசித்து இனி குடும்பத்தை விட்டு வாழ்வதில்லை என்ற உறுதியில் மீண்டும் தாயகம் வருகிறான் நாராயணன். அப்படி வருபவனுக்கு மேலும் பொருளாதார அதிர்ச்சி மறுபடியும் துபைக்கு துரத்துகிறது விதி.

இப்படி வாழ்க்கையில் 50 ஆண்டு கால வாழ்க்கைக்கு பிறகு தனக்கு என்று ஒரு வீட்டை கட்டிக்கொண்டு தனது கடைசி காலத்திலாவது தன்னுடைய குடும்பத்துடன் வாழ நினைத்து வீட்டையும் கட்டி அந்த வீட்டிற்கு என்று ஒரு விளக்கை வாங்கி வீடு திரும்புகிறான் துபையில்.

அன்றைய இரவில் துபையில் இருக்கும் ஒரு மளையாள தொகாவில் துபைவாழ் மளையாளிகளின் வாழ்க்கையை பற்றிய ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு பேட்டி எடுக்கிறார்கள் நாராயணனை.

அந்த பேட்டிக்கு பிறகு இரவு தூக்கும் அவன் அப்படியே இறந்து போவதாக படம் முடிகின்றது.

காலையில் அவனை கண்ட அவனது அறை தோழர்கள் தாயகம் அனுப்புகிறார்கள் அவனது உடலை.

தாயகம் வரும் அவனது உடலை அவன் ஆசையாக கட்டிய வீட்டில் சில வினாடிகளாவது கிடத்திய பின் காரியங்களை மேற்கொள்ளலாம் என்ற கோரிக்கையை பின்னாளில் தெரிந்தால் ஒருவரும் வீட்டை வாங்க மாட்டார்கள் என்று சொல்லி அப்படியே நேராக காரியம் நடத்தும் இடத்திற்கு கொண்டு செல்லும் காட்சி இதயத்தை பிழியாமல் இருந்தால் இரக்கமற்றவராகத்தான் இருப்பர் பார்ப்பவர்கள்.

காரியங்கள் முடிந்து வீட்டில் இருக்கும் போது நாராயணன் கொடுத்த பேட்டி தொகாவில் ஒளிபரப்பு ஆகுகின்றது.

அது வரையில் குடும்பத்தை சுமந்த அந்த மனிதனை வெறும் பணம் செய்து கொடுக்கும் இயந்தரமாக மட்டும் பார்த்து பழகிய அவனுடைய சுற்றத்தாருக்கு அவனது நெஞ்சுக்குள் புதைந்து இருக்கும் அளவு கடந்த பாசத்தின் வெளிபாடாகவும். எவ்வளவு சிரமப்பட்டு அந்த பணத்தை அவன் வீட்டுக்கு அனுபியதாகவும். தான் பட்ட அவ்வளவு சிரமம்களும் தங்கைகளின் நலவாழ்வும் மகன் மகளின் நல்வாழ்க்கையும் தான் அவன் கண்ட வாழ்க்கையின் பலனாகவும் வெற்றியாகவும் அவன் கூறும் இடம் நெகிழ்வோ நெகிழ்வு.

ஒரு நல்ல குடும்பப்படம். பாக்கியதேவதாவுக்கு அடுத்து வந்து இருக்கும் அருமையான குடும்பபடம் இந்த பத்தேமாரி. வாழ்த்துகள்......

Friday, February 19, 2016

மீண்டும் அத்வானி பாணியில் வெடிகுண்டு அரசியல் - பாசக

எப்போது எல்லாம் பாசக பலவீனப்பட்டு விடுகின்றதோ அப்போது எல்லாம் தேசபக்தி தீயை மூட்டி, தேசத்தையும் தேசியத்தையும் காக்க பாசகவாவை விட்டால் யாரும் இல்லை என்றது போல் ஒரு போலி பிம்பத்தை காட்டி ஏமாற்றும்.

சென்ற முறை பாசக ஆட்சியில் அத்வானி எங்கே எல்லாம் கூட்டம் நடத்த செல்வாரோ அங்கே எல்லாம் அத்வானி வருவதற்கு முன்பும் இல்லை பாதுகாப்பான தூரம் அந்த ஊரைவிட்டு அத்வானி சென்றபிறகு குண்டுகள் வெடித்ததை பார்த்து இருக்கின்றோம்.

6 ஆண்டுகாலமும் அந்த தீவிரவாத அமைபுகள் ஒரு முறை கூட அத்வானி இருக்கும் போது குண்டுகளை வெடிக்கமுடியாமல் பார்த்துக்கொண்டோம் என்று சொல்லி மறைக்க பார்க்கிறது இல்லை அந்த தீவிரவாத இயக்கம் எல்லாம் குண்டுகள் மட்டுமே வெடிக்க தெரிந்த கத்துகுட்டி இயக்கம் என்று ஒரு புதிய விளக்கம் தரபோகின்றதா....

ஏதோ ஒரு தடவை மறுதடவை என்றால் எங்கேயோ தவறு நிகழ்ந்தது என்று சொல்லாம், ஆனால் ஒவ்வொரு முறையும் எப்படி சாத்தியப்பட்டு இருக்கும் அதுவும் 6 ஆண்டுகள் என்றால் தர்கரீதியில் இது பாசகவினால் நடத்தப்பட்ட வெடிகுண்டு நாடம் இல்லாமல் வேறு என்னவாக இருக்கமுடியும்.

அன்றைக்கு வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து உணர்வுகளை எழுப்பியவர்களுக்கு இப்போது கருத்து குண்டுகளை வீசி அதைவிட அதிக உணர்ச்சி கூட்டங்களை எழுப்பி வருகின்றது.

மறுபடியும் என்று முன்னால் காங்கிரசு தலைவர்களின் பெயர்களில் இருக்கும் அரசு சார் பல்கலைகழகளும் மற்றும் கல்வி நிறுவனங்களில் இந்த கருத்து குண்டுகளை திட்டமிட்டு வெடித்துவிட்டு முதலில் குரல் கொடுத்துவிட்டால் பழி நம்மீது விழாது என்ற கருத்தில் இயங்கி வருகின்றது.

தென்னகத்தை பொருத்த அளவில் வட மாநிலங்களில் ஓடும் உணர்ச்சி பெருக்கு எல்லாம் ஒன்றும் ஓட போவது இல்லை. இந்த மாதிரி நிறைய பார்த்து இருக்கிறார்கள். மிகவும் தெளிவாக கண்டிக்க தக்க அந்த கோசங்களை பேசியவர்கள் தண்டிக்கவும் தக்கவர்கள் தான். ஆனால் சம்பந்தமே இல்லாமல் கன்னைய குமாரையும் கோவனையும் கைது செய்து அதன் மூலம் மற்றவர்களை மிரட்ட நினைப்பதை ஊடகங்கள் உட்பட அனைவரும் கண்டிப்பதை பார்க்கும் போது பெருமை கொள்ள நினைக்கிறது மனது. உண்மையில் அந்த கேசங்களை பேசியவர்கள் கடைசியில் பாசகவினராக இருப்பார்கள். கையில் இசுமாயில் என்று பச்சை குத்தி இருப்பார்கள், தலையில் குள்ளா வைத்து கொண்டு கத்தி இருப்பார்கள். இல்லை என்ன என்ன இசுலாமிய அடையாளங்கள் இருக்கின்றனவோ அவைகளில் மிகவும் எளிதாக அடையாளம் கண்டுகொள்ள கூடிய ஒப்பனையில் வந்து கத்தி கோசமிட்டு பிறகு ஓடி ஒளிந்து இரகசியமாக ஒப்பனையை களைத்துவிட்டு வந்து அப்படி கத்திய மாணவர்களை கைத்து செய்யுங்கள் என்று அவர்களே முழக்கமும் இடுவார்கள்.

இது மிகைபடுத்தி எழுதப்படுவது இல்லை, இணையத்தில் இருக்கும் மாணவர்களின் ஆங்கில பேட்டியை பார்த்தால் உங்களும் உண்மை புரியும்.

தென்னகத்தில் பாசக எதிர்பார்த்த எழுற்சி இல்லாததால் ஊடகங்களில் தோன்றும் பாசகவினர் என்னங்க அவங்க இந்தியாவை துண்டாட வேண்டும் என்று சொன்னவர்களை ஆதரிக்காதீர்கள் என்று புலம்புவதையும் அந்த புலம்பல்களுக்கு சொன்னவர்களை கைது செய்யுங்கள் தண்டியுங்கள் ஆனால் இவர்கள் செய்த தவறு என்ன என்று கம்பீரமாக கேட்பதை பார்த்து பாசகவினர்கள் திணருவதையும்  நெளிவதையும் கண்கூடாக பார்க்கமுடிகின்றது.

இனி என்ன என்ன கருத்து வெடிகுண்டுகளை எல்லாம் பாசக வீச போகின்றதோ அதில் யார் யாரை எல்லாம் கொளுத்த போகின்றதோ. ஒருவரும் கிடைக்கவில்லை என்றால் கோத்ராவில் இந்துகளையே கொளுத்தியது போல் பாசகவினர்களையே கொளுத்தும் பாசக. யார் அந்த அப்பாவி பாசகவினரோ பாவம் அந்த குடும்பம். நிச்சயமாக கருப்பு நிறத்தில் இருக்கப்போகும் படித்த ஏழை மாணவராக இருப்பார் என்று மட்டும் உறுதியாக கணிக்கலாம்.

Wednesday, February 17, 2016

சாமிக்கே சம்மன் - மக்களை முட்டாள்களாக்கும் விகடன்

இன்றைய செய்திகளில் விகடன் வெளியிட்டிருக்கும் செய்தி இது.

பொது மக்களுக்கு தான் நீதிமன்றங்களின் நடப்புகள் தெரியாது இப்படி எல்லாம் பேசுவார்கள், விகடனுக்கு கூடவா தெரியாது நீதிமன்ற நடப்புகள்.

என்னமோ ஒரு நீதியரசர் யார் என்ன என்று விசாரித்து சம்மன் அனுப்ப சொன்னது போல் செய்தி நீள்கிறது.

 நீதிமன்ற சம்மன் அந்த வழக்கை கையாளும் வக்கீலோ அல்லது தனி நபரோ இவருக்கு ஒரு சம்மன் அனுப்புங்கள் என்று படிவம் பூர்த்தி செய்து நீதிமன்ற பதிவாளரிடம் கொடுத்தால் வழக்கு எண் மட்டுமே சரிபார்க்கப்பட்டு நீதிமன்ற பெயரில் அனுப்பபடும்.

இது வழக்குகளை சந்தித்தவர்களுக்கும் வக்கீல்களுக்கும் தெரிந்த ஒரு சாதாரண செய்தி. இதை வைத்துக்கொண்டு மக்களை முட்டாளாக்க நினைகிறது விகடன்.

விகடன் என்ன செய்து இருக்க வேண்டும் இந்த சம்மனை அனுப்பியவரை அடையாளப்படுத்தி இப்படியயா செய்வீங்க என்று சொன்னால், அட மடையரே என்று மக்களுக்கு செய்தியாக அமைந்து இருக்கும் அதைவிடுத்து நீதிமன்றத்தை கேலி பேசும் விதமாக குறும்பான செய்தியாக வெளியிட்டு இருக்கிறது.

கேட்பவர்கள் கேனையாக இருந்தால் எலி ஏரோபிளேன் ஓட்டுதுன்னு சொல்வார்களம் அந்த மாதிரி. போங்கப்பா போய் வேலைய பாருங்கப்பா உங்க அக்க போர் தாங்கல.......

Saturday, February 13, 2016

விசாரணை படமும் சுப்பிரமணி சாமியும்

விசாரணை படம் காட்டும் செய்தி இதுவாக எடுத்துக்கொள்ளலாம். எப்போது எல்லாம் ஒரு மிக பெரிய அநியாயம் நிகழ்த்த படுகின்றதோ அப்போது எல்லாம் சட்டத்தின் மற்றும் சமுதாயத்தின் கண்களை அடைக்க சில பல அப்பாவிகளை பலியிடப்படுகிறது என்று படம் ஆணித்தனமாக விளக்குகிறது.

என்ன தான் நல்ல மனிதராக இருந்தாலும் சூழ் நிலையில் மாட்டும் போது மேலதிகாரிகளுக்கு பயந்து ஐயா சொல்ராரு ஆய்வாளர் கொல்கிறார் என்று முகத்தில் அறைவது போல் சொல்லி இருக்கிறார்கள்.

சூழ் நிலையில் மாட்டி இந்த காரியத்தை செய்வதற்கு பதில் குண்டடிபட்டு சாகலாம் சுடு என்று சொல்லும் வசனமும் அதற்கு பதிலாக நான் வாழ்வதற்காக உங்களை கொல்வதா என்று சொல்லும் வசனம் படத்தின் உச்சம்.

அஞ்சாதே படத்தில் ஆய்வாளனாக சேர்ந்த புதிதில் கண்ட முதல் கொலையை பார்த்ததும் தடுமாறும் தடுமாற்றம் போல் சமுத்ரகனி பாத்திரம் அழகாக படைத்து இருக்கிறார் இயக்குனர்.

இப்படி எத்தனையோ செய்திகளை படத்தில் இருந்து பட்டியலிட்டு எழுதலாம். ஆனால் பதிவின் நோக்கம் அது அல்ல.

விபு வழக்கு விசாரணைக்கு வரும் போது எல்லாம் சுசா கொன்னுடுங்க அவங்கள வெளியில விட்டு விடாதீங்க என்று தூக்கத்தில் கூட அலறுவது ஏன் என்று அழகாக இந்த படத்தின் மூலம் பொது மக்களுக்கு புரியவைத்திருக்கிறார்கள்.

விசாரணை அதிகாரிகள் மற்றும் திருச்சி சிவா, சுப்பிரமணி சாமி படுகொலைக்கு முன்னும் பின்னும் என்ன எல்லாம் செய்தார் என்று அழகாக விளக்கியும். அவைகளின் அடிப்படையில் தயாரிக்க பட்ட செயின் ஆணையம் மற்றும் வர்மா ஆணையம் அறிக்கைகள் காணாமல் போனது வரை இந்த 7 மனிதர்களை கொன்று கணக்கு காண்பித்து விடுவோம் என்ற செய்கை தவிர வேறு என்ன.

அந்த 7வரும் உயிருடன் இருக்கும் வரையில் என்றைக்கு வேண்டுமானாலும் தான் மாட்டிக்கொள்வோம் என்ற பயம் இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்.

இன்னமும் யார் யார் எல்லாம் இந்த செய்கையில் இந்திய அளவில் விலை போயிருக்கிறார்கள் என்று ஒரு பெரிய பட்டியலாக இருக்க வேண்டும் அதனால் தான் உச்ச நீதிமன்றம் வரை இந்த சு சா வால் ஆணையத்தின் அறிக்கைகள் வரை அழிக்கவும் கொல்லுங்க கொல்லுங்க என்று பரப்புரை செய்யவும் முடிகின்றது.

இன்னும் இது போல் நிறைய படங்கள் தமிழிலாவது வரவேண்டும் வரவேற்போம் அந்த மாதிரியான படங்களை.

தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் மனிதர்களும் அடித்தால் திருப்பி அடிக்க வலிமை இல்லாத மக்களும் தான் இந்த மாதிரியான அசிங்க மனிதர்களின் இலக்கு.

வலிமை தான் ஆளும் என்று இருந்த காலத்தில் கூட நாடும் சட்டமும் அனைவருக்கும் பொது என்று தமிழகத்தில் தொன்று தொட்டு நாகரீகமாக வாழ்ந்து வந்து இருகின்றோம் ஆனால் இன்றைக்கு அவைகள் எல்லாம் அடுத்தவருக்கு அறிவுரை சொல்லவும் புத்தகத்திற்கு மட்டுமே என்று ஆகிபோனதை பார்க்கும் போது கண்ணை கட்டுது...........

Thursday, February 11, 2016

இறுதிச்சுற்று - Million Dollar Baby படமும் - மணிரத்னமும்

இதுவும் அதுவும் பெண்கள் குத்துச்சண்டையை மையமாக கொண்டது தவிர வேறு ஒன்றும் இல்லை என்று நம்பும் அளவிற்கு அழகாக மாற்றி எடுத்து இருக்கிறார்கள்.

எப்படி மாற்றி இருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

ஆங்கிலத்தில் பயிற்சியாளர் வயதானவர், ஒரு கட்டத்தில் இந்த வயதிற்கு பிறகு இன்னும் ஒருவரை தயார் செய்து போட்டியில் இறக்கும் வயதிலா நான் இருக்கிறேன் என்று அந்த பாத்திரமே பேசும் அளவிற்கு வயதானவர் கிளின்ட்டு ஈசுட்டுட்டை போல்.

தமிழில் அதையே நடுத்தர வயது இளைஞனாக மாற்றிவிட்டர்கள்.

அந்த முதிய வயதிலும் படத்தின் ஒரு இடத்தில் கூட சவரம் செய்யாமல் தோன்றும் தோற்றம் இல்லை ஆங்கிலத்தில்.

தமிழிலோ பரட்டை தலை மழிக்காத முகம் என்று மாற்றிவிட்டார்கள்.

ஆங்கிலத்தில் அடுத்த 3 போட்டிகளுக்கு பிறகு உலக குத்து சண்டைக்கு தயாரக கொண்டு வந்த வீரன் சொல்லிக்கொள்ளாமல் பயிற்சியாளரை விட்டு ஓடி விடுவான். அதை தொடர்ந்து என்ன செய்ய போகிறேன் என்று திணறி நிற்பார்.

தமிழிலோ கட்டிய மனைவி ஓடிவிட்டாள் என்று மொட்டையாக முடித்து, என்னை விட உலக வீரன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்றது தான் அவளுடைய ஆசையாக இருந்தது என்று பட்டும் படாமல் சொல்லி முடிப்பதாக மாற்றிவிட்டார்கள்.

ஆங்கிலத்தில் மோர்கன் பிரிமேன் நடித்த பாத்திரத்தில் தமிழில் நாசர், ஆங்கிலத்தில் அவருக்கு ஒரு கண் குருடாகி இருக்கும் தமிழிலோ நாசரின் முன் பல் காணாமல் போனதாக ஒப்பனை இருப்பதை பார்க்க முடிகிறது. ஏன் பல் போனது என்று ஒரு விளக்கம் இருந்து இருக்க வேண்டும் அப்படியே மூலம் போல் வருகிறது என்று வெட்டி விட்டார்கள் போலும். மேலும் அமெரிக்க கருப்பர்கள் பேசும் ஆங்கிலம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும் அதையே நாசரின் சென்னை தமிழாக மாற்றிவிட்டார்கள்.

ஆங்கிலத்தில் தனக்கு பயிற்சி கொடுக்கும் படி அவனையே சுற்றி வருவாள் நாயகி. தமிழில் பயிற்சிக்கு வா வா என்று நாயகன் சுற்றுவதாக மாற்றி விட்டார்கள்.

ஆங்கிலத்தில் பணத்தை பார்த்து பார்த்து சேர்த்து வைப்பவனாக காட்டி இருப்பார்கள், அவனை போல் அந்த பெண்ணையும் மோர்கனையும் வலியுறுத்தி சொல்லும் படி வசனங்கள் வரும்.

தமிழில் நாயகன் கையில் இருக்கும் காசை எல்லாம் இவளுக்காக கொட்டி இறைப்பதாக மாற்றிவிட்டார்கள்.

ஆங்கிலத்தில் நாயகி ஓர் சின்ன கிராமத்தில் இருந்து வந்த ஒரு 30 வயதுகாரி எந்த வித குத்துச்சண்டை தொடர்பும் இல்லாமல் தனக்கு இருக்கும் வலிமையும் சண்டை செய்யும் ஆசையும் கண்டு குத்துச்சண்டை வீராங்கனையாக வேண்டும் கிளின்டு பயிற்சியகத்தில் வந்து சேர்கிறாள்.

தமிழிலோ சென்னையின் ஒரு புரநகர் சேரியில் இருப்பதாகவும் அவளது அக்கா சின்ன வயதில் இருந்து சண்டை பயிலுவதாகவும். அதை பார்த்து தானும் கத்துக்கொண்டதாக மாற்றி விட்டர்கள்.

ஆங்கிலத்தில் நாயகின் அம்மா 314 பௌன்டு எடை என்று சொல்லி ஒரு குண்டு பெண்மணியை காட்டுவார்கள், தமிழில் ஒரு மெல்லிய மேனியாளாக நாயகியின் அம்மாவை மாற்றிவிட்டர்கள்.

ஆங்கிலத்தில் நாயகியின் அப்பாவை ஒரு பொருப்பான வராகவும் அதை தொடர்ந்து பின் கதைக்கு தேவையான ஒரு கதையும் நாயகி சொல்வாள்.

தமிழில் அப்பா ஒரு ஊதாரியாக மாற்றிவிட்டர்கள், மேலும் பின் கதைக்கு தேவையான செங்கிட்தான் கதையை நாயகன் சொல்வதாக மாற்றிவிட்டார்கள்.

ஆங்கிலத்தில் 20 வினாடிகளில் அதிரடியாக அடித்து முடிக்காமல் நிதானமாக சண்டை போட சொல்லி சொல்வார். ஆனால் அவளோ நிதானமாக எல்லாம் எனக்கு வரவில்லை என்று மேடையில் இருந்தே சொல்வாள்.

தமிழில் நாயகிக்கு நிதானமாக எல்லாம் அடித்து ஆட முடியாததனால் அதிரடியாக அடித்து ஆடு என்று மாற்றிவிட்டார்கள். மேலும் வேண்டும் என்றே தப்படி அடிப்பதாகவும் அதை மாற்றிவிட்டார்கள்.

கடைசியாக நடக்கும் சண்டையில் வில்லியின் காலில் குத்தி அவளை பலவீன படவைத்து பிறகு முகத்தில் குத்து என்று இருக்கும் ஆங்கிலத்தில், அதை அப்படியே தமிழில் கையாக மாற்றிவிட்டு பிறகு முகத்தில் குத்துவதாக மாற்றிவிட்டார்கள்.

இறுதிப்போட்டிக்கு நாயகியை அனுப்பலாமா வேண்டாமா என்று தடுமாற்றம் நாயகனின் மனதில் இன்னமும் பயிற்சி நிறைய கொடுத்தது பிறகு என்று தள்ளிப்போட்டுக்கொண்டே வருவதாக ஆங்கிலத்தில் வருகிறது.

தமிழிலோ வேறு ஒருவர் நீ அர்சுனா விருது வாங்கினியா அப்படி இப்படி என்று அரசியலாக ஆக்கிவிட்டார்கள்.

ஆங்கிலத்தில் நாயகியின் வீட்டார்களை பார்த்துவிட்டு அவர்களின் பேராசை செய்கைகளில் மனம் வெறுத்த நிலையில் தனது தந்தையையினுடனான நெகிழ்ச்சியாக தருணங்களை நினைவுகளாக பயிற்சியாளனிடம் வெளிப்படுத்துவாள். உயிரோடு இல்லாத தந்தை போல் பயிற்சியாளரை பார்ப்பதாக சொல்லாமல் சொல்வதாக மிகவும் அருமையாக வசனங்கள் அமைத்த இடம்.

அதை தமிழில் புடவைகட்டி மீன் கொழம்பு கொண்டு வந்து நான் உன்னை காதலிக்கிறேன் என்று மாற்றிவிட்டர்கள்.

ஆங்கிலத்தில் பயிற்சியாளருடன் பார்க்கும் அவளது குடும்பத்தாளர்கள் அவள் அந்த வயதானவருடன் சேர்ந்து வாழ்வதாக சந்தேகித்து முறையான திருமண வாழ்கையை ஏற்படுத்திகொள்ளும் படி ஏசுவார்கள்.

அதையே தமிழில் பொம்பள பொறுக்கி எப்ப பாத்தாலும் மதி மதின்னு அப்படி என்ன தான் பண்ண அவனை என்று சகோதரி கேட்பதாக மாற்றிவிட்டர்கள்.

ஆங்கிலத்தில் ஐரோப்பவின் குத்துச்சண்டைக்கு அவளுக்கு என்று ஒரு பச்சை பட்டங்கி மேலாடையை அவளுக்காக கொணர்ந்து கொடுப்பார்.

தமிழில் அதே பட்டு மேலங்கி ஆனால் நிறம் சிகப்பு அங்கியில் மோ குசல்லுக்கு பதில் இந்தியா என்று பெயர் மாற்றம்.

ஆங்கிலத்தில் அந்த இறுதி சண்டைக்கு பிறகு படம் இன்னமும் 30 நிமிடத்திற்கு மிகவும் உருக்கமாகவும் அழுத்தமாகவும் சென்று மிகவும் சோகமாக முடிகின்றது. தமிழிலோ அந்த இறுதி சண்டையோடு மகளிர் குத்து வீரர்களுக்கு சமர்பணம் என்று முடித்து விட்டார்கள்.

ஆங்கிலத்தில், பார்த்தது முதல் கடைசி மூச்சு வரை பயிற்சியாளரை பாசு என்று பக்தியுடனும் மரியாதையுடனும் விளிப்பாள் நாயகி, தமிழில் என்னை கோச்சு என்று மரியாதை என்று கேட்டு வாங்குவதாக மாற்றியுள்ளார்கள்.

ஒரு குத்துச்சண்டையாளியாக ஆன பிறகும் அந்த சின்ன வீட்டில் ஒரு தொகா பெட்டி கூட இல்லாமல் இருப்பாள் தான் முன்னே பார்த்த அதே உணவு பரிமாளியாக.

தமிழில் வீட்டை விட்டு விரட்டப்பட்டு ஒரு ஒன்டு வீட்டு மாடியில் வசிப்பதாக மாற்றிவிட்டார்கள்.

இப்படி காட்சிக்கு காட்சி வசனத்துக்கு வசனம் என்று எடுத்து காட்டும் படியாக ஆங்கில படத்தை அப்படியே 360 டிகிரிக்கு மாற்றி வேறு ஒரு படமாக மணிரத்னம் பாணியில் அவரது சீடர் சுதா எடுத்துள்ளார்.

என்ன மணியாக இருந்தால் இன்னேரம் இராமாயணம் மகாபாரதம் என்று எதையாவது கதையாக விட்டு அசலில் சாயலை மக்கள் மறந்து போகும் விதமாக விளம்பரப்படுத்தி இருப்பார். சுதாவோ அப்படியே விட்டு விட்டார்.

இவ்வளவும் இருப்பினும் தமிழில் படம் நன்றாக வந்து இருக்கிறது மக்களுக்கும் பிடித்து இருக்கிறது. சக்குதே இந்தியா படத்தில் எப்படி ஆக்கியை மையமாக அமைத்த படமாக இருந்தாலும் ஆக்கியை பற்றி ஒன்று கூட சொல்லாமல் வெறும் உணர்ச்சிகர வசனங்களும் தேசபற்றும் மட்டும் காட்டி செல்வது போல் குத்துச்சண்டை என்று சொல்லி என்ன எப்படி என்ற எந்த விளக்கங்களும் இல்லாமல் பாலியல் தொல்லை அரசியல் என்று அழகாக இரசிகர்களை மோடிவித்தையாக் ஏமாற்றி போகிறார் சுதா.

பார்க்கலாம் அடுத்து எந்த படத்தை 360 டிகிரி மாற்றி எடுகிறார் என்று.

மணிரத்னத்தின் இராவணன் ஒரு ஆங்கிலப்படம்

ஓ காதல் கண்மணி - மணிரத்தினம் மறுபடியும் தனது பாணியில் The Notebook

இந்த இறுதிச்சுற்று படத்தை பார்த்த பாலா ஏன் இவ்வள உணர்ச்சி வசப்பட்டார் என்று பிறகு சொல்கிறேன்.

Friday, February 5, 2016

மருதநாயகம் - கமலுக்கு இது தேவையா

இந்த படம் துவங்கப்பட்ட உடன் தோராயமான கதை என்ன என்று தெரிவித்தார்கள், வதந்திகள் வந்தது.

அந்த தோராயமான கதையை பார்த்தால் ஆங்கிலத்தில் வந்த Gladiator படத்தின் கதையும் இந்த படத்தின் கதையும் ஒன்றே.

இங்கிலாந்து தயாரிப்பில் வந்தால் படம் ஆசுகர் விருது பெறும் என்று நம்பி அவர்களிடம் கதையும் திரைகதையையும் பகிர்ந்தார் கமல். பின் நாளில் அதே கதையை கொண்டு ஒரு புராதாரண வரலாற்று படமாக ஆங்கிலப்படம் வந்தது. வந்து ஆசுகர் விருதுகளும் பெற்றது அனைவரும் அறிந்ததே.

பிறகு மறுபடியும் எதற்கு இந்த படம் என்று தெரியவில்லை. அப்படி என்ன கதை மாற்றங்களை கொண்டு வந்து எடுக்கப்போகிறார். பாவம் இன்னும் ஒரு கலைபுலி தாணுவை உருவாக்காமல் இருந்தால் சரி தான்.........