Tuesday, July 28, 2015

அப்துல் கலாம் - இந்தியாவின் சாதாரண மக்களின் நம்பிக்கை

கலாமின் இழப்பு ஈடுகட்ட முடியாத ஒரு இழப்பு. நல்ல மனிதர்களின் மறைவு எவ்வளவு பெரிய இழப்பு என்று மறுபடியும் காட்டிய நிகழ்வு இது.

பொதுவாக பணக்கார மக்களுக்கு மட்டும் தான் பெரிய படிப்பு எல்லாம் சாத்தியம் என்று மாய்ந்து இருந்த காலத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும் நன்றாக படிக்கும் பட்ச்சத்தில் நல்ல படிப்பு படிக்கலாம் என்று நிகழ்த்திக்காட்டியவர்.

வள்ளுவர் சொன்னது போல் எல்லா சொத்தையும் விட கல்விதான் முதன்மையான சொத்து என்று தேடி, வளர்த்துக்கொண்ட திறமையும் ஆற்றலும் அவரை இந்தியாவின் அறிவியல் முன்னேற்ற திட்டங்களை வகுத்து எடுக்கவும், முன் நடத்தி செல்லவும் வைத்தது.

பொதுவாக தனது திறமை என்ன என்ன பதிவிகள் கிடைக்கும் என்று தெரிந்துக்கொண்டு காய்களை நகர்த்தும் இந்த காலத்திலும் இவரை தேடி பதவி வரும் விதத்தில் தன்னை தயார்படுத்தி கொண்டவர். வந்த வாய்ப்பை இந்தியா இருக்கும் காலம் வரை இவரது பேரும் இருக்கும் விதத்தில் செவ்வனே பயனாக்கி கொடுத்தார் இந்தியாவிற்கு.

அனைத்து ஊடகமும் கொண்டாடுவதை போல், மொழி, மதம், இனம் கடந்த மாமனிதர் இவர்.

ஆசான் என்றைக்கும் ஆசான் தான் என்று உலக்கு மறுமுறையும் நிறுவியவர்.

இந்தியாவின் உயரிய விருதுகளில் அத்தனையும் பெற்றவர், அந்த விருதகள் எல்லாம் இவரை சேர்ந்ததில் தான் மகிழ்ந்து இருக்கும்.

ஒரு படித்த பண்டிதர்க்கு பதவி கொடுத்தால் அதை எப்படி எல்லாம் சிறப்பாக செயலாற்றமுடியும் என்ற வித்தியாசத்தை விதைத்து சென்றவர் இவர்.

இந்தியாவின் கடைசி எளிய குடும்பத்து தந்தை கூட நன்றாக படிடா எல்லாம் தன்னால வரும் என்ற நம்பிக்கையை நாட வைத்த நாயகன் இவர்.

எவ்வளவு நாள் வாழ்ந்தார் என்றது முக்கியம் இல்லை ஆனால் எப்படி வாழ்ந்தர் என்றதே முக்கியம் என்ற இலக்கணத்தை மறுமுறையும் வாழ்ந்து காட்டி உலக்கு காட்டிய உத்தமரே உங்கள் புகழ் வாழ்க ஓங்குக.............

Friday, July 24, 2015

ஷர்மிலி மிஸ் - பாசம் இவ்வளவு ஆழமா

குழந்தைகளை அடிக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது எதுவாக இருந்தாலும் எங்ககிட்ட சொல்லுங்க துவங்கி இன்னமும் என்ன என்ன வடிவங்களில் வரவேண்டுமோ அவ்வளவு வடிவங்களில் வந்துக்கொண்டு இருக்கிறது.

பின்னூட்டம் இடும் அனைவரக்கும் அந்த ஷர்மிலி மிஸ்ஸுடன் பேசி பழகியது போல் அப்படி ஒரு உரிமையுடன் பேசவும் எழுதவும் செய்கிறார்கள்.

அவர்களின் குழந்தையின் மிஸ் மட்டுமா அவர், அவரவர் வாழ்க்கையிலும் இது போல் ஒரு ஷர்மிலி மிஸ் இருப்பதே அதற்கு காரணமாக இருக்கும்.

அந்த சின்ன வயதில் விவரம் தெரியாத, வீட்டையும் அம்மாவையும்  மட்டுமே தெரிந்த நமக்கு அன்னைக்கு அடுத்து அதிக நேரம் செலவிட்டது இந்த ஷர்மிலி மிஸ்ஸுடன் தானாக இருந்து இருக்கும். என்ன பெயரும் ஊரும் தான் வித்தியாசமாக இருந்து இருக்கும். மற்றபடி இந்த கதைகளில் கொண்டாடபடும் அந்த ஷர்மிலி மிஸ்ஸாக அனைத்து மிஸ்களும் வாழ்கிறார்கள்.

இவர்களுக்கு இது வேலை மட்டும் இல்லை அதையும் தாண்டி ஒரு அரவணைப்பு இருக்கும் இவர்களிடம். என்ன என்று அன்புடனும் என்ன்ன என்று அன்னை காட்டும் அதே கண்டிப்பை அழகாக காட்ட தெரிந்தவர்கள். அன்றைக்கு முதல் முதலில் உலகை நமக்கு எல்லாம் அறிமுகபடுத்திய ஆசிரியைகள் இவர்கள்.

எத்தனை ஆண்டுகள் ஆன போதும் அந்த சின்ன வயதில் பார்த்தது போல் உரிமையுடனும் அவர்கள் நம்மை விசாரிப்பதும், அவர்களை பார்த்துவிட்டு வந்து நேடு நேரம் ஆனபின்பும் அவர்களை பற்றியே நினைத்துக்கொண்டே இருப்பதும் நாம் பெற்ற வரம் என்று தான் சொல்லவேண்டும்.

இந்த உணர்விற்கு தண்ணீர் ஊற்றி உயிர் ஊட்டிய பதிவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி........

வாழ்க வளர்க அந்த ஆசிரியைகளும் அவர்களது தன்னலம் அற்ற தொண்டும்........

Thursday, July 23, 2015

இராகுலை பற்றி உளவாளி சுசாமி சொல்வது நம்ப தகுந்த தகவல் தானா - அமெரிக்கா என்ன குசராத்து என்று நினைத்து இருப்பார் போலும்.....


இராகுல் நல்லவரா கெட்டவரா என்ற ஆராய்சி அல்ல இந்த கட்டுரை. மாறாக இந்த உளவாளி சுப்பிரமணி சாமி எப்படி அளந்துவிடுகிறார் என்று சொல்லவே....  

ஆகவே இராகுல பத்தி இதுவா சொல்ர என்று கழுவி ஊற்றும் எண்ணத்தோடு வரும் பதிவர்கள் அடுத்த பதிவர்களை பார்ப்பது நல்லது.

அமெரிக்காவின் சிவில் வழக்குகளில் அமெரிக்க நீதிமன்றம் இந்திய நீதிமன்றங்களுக்கு இணையாகவும் இன்னமும் சொல்லப்போனால் ஒரு தலைபட்சமாகவும் நடந்துக்கொள்ளும் என்றதில் எந்த ஐயப்பாடும் வேண்டாம். இதற்கு நேற்று நடந்த வழக்குகள் வரை உதாரணம் காட்டமுடியும்.

ஆனால் அதுவே கிரிமினல் குற்றம் என்று வந்தால் அது ஒபாமாவாகவே இருந்தாலும் குற்றம் குற்றமே என்று நடந்துக்கொள்ளும் நீதிமன்றங்கள் அமெரிக்க நீதிமன்றங்கள்.

சென்ற அமெரிக்க ஆட்சியில் புச்சு அதிபராக இருக்கும் வேளையிலே அவரது மகள்கள் குடித்துவிட்டு வண்டிய ஓட்டியதற்காக தண்டிக்கபட்ட செய்தி உலகம் அறிந்தது இந்த தொடர்பில் சென்று பார்க்கவும்.

இது மட்டும் இல்லை சமீபத்தில் காவலர்கள் பெண்களிடம் தவறாக நடந்துக்கொண்டார்கள் என்று அவர்களை பிடித்துவைத்து இருக்கிறது நீதிமன்றம். அதுமட்டும் இல்லை அவர்கள் வெளியில் வரும் பிணை தொகை செலுத்தமுடியாத அளவுக்கு உயர்த்தபட்டும் இருக்கிறது.

சமீபத்தில் நடந்த பிடல்பியா கலவரங்களில் அந்த கைதியை கொன்ற காவலர்கள் 5வரும் மரண தண்டனையை எதிர் நேக்கி இருக்கிறார்கள். கொல்லப்பட்ட அந்த கைதி ஒன்றும் தியாகி இல்லை. கொலைகாரன் கொள்ளைகாரனான அவனை கொன்றதிற்கு இந்த நிலைமை.

இன்னமும் இது மாதிரி ஆயிரம் ஆயிரம் உதாரணங்களை காட்டமுடியும் கிரிமினல் குற்றங்களை அடிப்படையாக கொண்ட வழக்குகளில் அமெரிக்க நீதிமன்றங்களின் நடவடிக்கைகளை.

லலித் மோடி வைத்து இருந்த கட்டுப்படுத்தபட்ட/தடை செய்யப்பட்ட மருந்துக்கோ வைத்து இருந்த அளவுக்கு தகுந்தார் போல் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதாக வந்த செய்திகள் என்னவோ அமெரிக்காவில் நடந்தது போல் தான் இருக்கிறது. தனது உபயோகத்திற்கு என்று வைத்து இருக்கும் மருந்தின் அளவை பொருத்து தண்டனை மாறும்.

ஆனால் சுசா சொல்வது போல் 1.6 லட்சம் அமெரிக்க டாலரும் போதை பொருள் வைத்து இருந்தாக FBI மக்கள் பிடித்தாக சொல்கிறார்.

இந்த FBI நிறுவனம் எந்த மாநில அரசுக்கும் கட்டுப்பட்டது அல்ல, அதே சமயம் அவர்கள் ஒரு வழக்கை தொடுத்தால் அழிப்பது கிட்டத்தட்ட முடியாத செயல்கள் அவைகள்.

என்னவோ வாச்சுபை மோடி மகிந்த பட்சேவை மீனவர் பிரச்சனையில் கூப்பிடது போல் அமெரிக்க அதிபருக்கு கூப்பிட்டு சொன்னதும் எல்ல தடையங்களையும் அழித்துவிட்டு போய்யிட்டு அடுத்த விடுமறைக்கு வா என்று அனுப்பிவிட்டது போல் ஒரு பொய் தகவலை வெளியிடுகிறார் சுசா.

ஒரு வேளை சுசா பார்த்த உளவு செயல்களில் வேண்டு என்றால் அப்படி எல்லாம் நடந்து இருக்கலாம் ஆனால் உளவாளிகள் தவிர மற்றவர்களுக்கு கிடையாது என்று இத்தனை ஆண்டுகளாக உளவாளியாக இருக்கும் சுசாவிற்கு தெரியாதா என்ன..........

பாசக ஊழல்வாதிகளுக்கு வக்காலத்து வாங்கும் சுசா கொஞ்சம் நஞ்சம் வைத்து இருக்கும் மானம் மரியாதையும் இழக்க நிலையில் தள்ளபடுவீர் MR உளவாளி.....

Tuesday, July 21, 2015

மாரி - என்ன ஒரு இலக்கியம், அனைவரும் பார்த்தே ஆகவேண்டிய படைப்பு

தனுசின் சமீபத்திய படங்கள் அதிகமாக பரிகாசிக்கபடுவது பார்க்கும் போது ஏன் இப்படி கலாய்கிறார்கள் என்று வருத்தமாக இருக்கும். அந்த வருத்தத்தை எல்லாம் தவிடு பொடி ஆக்கும்படி செய்துவிட்டது மாரி.

என்ன ஒரு கதை அமைப்பு, எத்தனை திருப்பங்கள் படத்தில் அப்பா தாங்கமுடியல....

படம் எப்ப தொடங்கிச்சு எப்போ முடிஞ்சது என்றே தெரியாமல் பிச்சுகிட்டு ஓடுது.....

படத்தில் வரும் அந்த புறாவித்தை அப்பா என்ன அழகு அந்த காட்சிகள் இன்னமும் அதிகமா என்ன தான் அது என்று காட்டினால் ஊருக்கு ஊர் இப்படி ஒரு போட்டி நடத்த வசதியாக இருந்து இருக்கும்.......ஏனோ படகுழுவினர் தவிர்த்து விட்டார்கள்.

படத்தின் நாயகியின் பாத்திரமும் நடிப்பும் அவ்வளவு அழகு. என்ன அவர் எதுக்கு படத்திற்கு என்று மட்டும் தான் புரிய மாட்டேங்குது...........

அந்த காவலர் ஏட்டின் தியாகமும் அதற்கான விளக்கமும் என்ன ஒரு இலக்கிய தரம் அடடா என்ன ஒரு இலக்கிய சுவை.......

அமாம் படத்தில அப்ப அப்ப தனுச எதுக்கு காட்டுகிறார்கள் என்றும் அப்படியே சொல்லிட்டாங்கன்னாலும் கூட கொஞ்சம் இந்த இலக்கியத்த புரிஞ்சுக்க வசதியா இருக்கும். அவர் பாட்டுக்கு ஏதோ அந்த பக்கதுல தம் அடிக்க வரும் போது எல்லாம் ஏதோ அவருக்கே தெரியா படம்புடிச்சு இந்த படத்தோட சேர்த்து தனுசு நடிச்ச படம்னு வித்துட்டாங்க போலும்....

படத்தின் கதை என்ன என்று பதிவில் தேடுபவர்களுக்கு ஒரு சேதி, கதை என்ன என்று மாரி - 2 அடுத்த மாதம் வருது அதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்............

இன்னும் இது மாதிரி சூரி, சுருட்டை என்று இரண்டு படங்களுக்கான கதை விவாதத்தை இந்த படத்தின் இயக்குனர் மும்முரமாக படமாக முனைந்து இருப்பதாக நமக்கு எல்லாம் ஒரு இனிப்பு செய்தி ஒரு கொசுரு...............

Saturday, July 18, 2015

தினமணி ஆசிரியர் என்ன சொல்கிறார் -சேவையும் தேவையும்... -- இது சரியா முறையா

சேவையும் தேவையும்...  என்ற தலைப்பில் தினமணியில் இன்று வந்த தலையங்கம்.

மொத்தத்தில் அவர் என்ன சொல்கிறார் என்றதை நாம் இப்படி பார்த்தால் தான் அவர் சொல்வது எவ்வளவு அபத்தமாக இருக்கிறது என்று தெரியும்.

அந்த காலத்தில் நவீண வசதிகள் இல்லாத காலத்தில் அமெரிக்காவில் உள்ள ஒருவரிடம் பேசுவதற்கு ஒரு நிமிடத்திற்கு ரூபாய் 20 வசூலித்தார்கள். ஆனால் இன்றைக்கு வந்து இருக்கும் நவீண கண்டுபிடிப்புகளின் உதவியில் அதே அமெரிக்காவிற்கு அதே ஆளிடம் பேச ஒரு நிமிடத்திற்கு 4 பைசா தான் ஆகுகிறது.

அன்றைக்கு ஒரு நிமிடத்திற்கு 20 ரூபாய் தந்தது போல் இப்போதும் கொடுக்கவேண்டும் அப்படி இல்லை என்றால் எந்த கண்டுபிடிப்புகள் உதவுதோ அவைகளை நீக்கி அதே பழைய கட்டணத்தை வாங்குவது தான் சரி என்று மனதார சொல்கிறார் ஆசிரியர்.

ஒரு காலத்தில் உள்ளூர், வெளியூர், வெளிமா நிலம் என்று இருந்த தொலை/அலை பேசிக்கட்டணம் இன்றைக்கு எங்கே பேசினாலும் நிமிடத்திற்கு இவ்வளவு தான் என்று வந்தது காலத்தின் கட்டாயமும் தேவையும் கூட. அதை விடுத்து இந்தியர்கள் சொரணை கெட்டவர்கள் என்ன செய்தாலும் கேட்கும் காசை கொடுத்துவிட்டு போவார்கள் என்று நினைப்பது சரியான சிந்தனை இல்லை.......

Friday, July 17, 2015

மெல்லிசை மன்னர் - அமைதியும் நிம்மதியுமாய் நிறைந்து இருப்பவர் என்றைகும்

முதலில் அவரின் மறைவுக்கு பிரிந்து தவிக்கும் உறவுகளுக்கு நமது இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து தொடருவோம்.

இன்றைக்கு அல்ல கடந்த 30 ஆண்டுகளாக இரவின் அமைதியை நிம்மதியான தாலாட்டாய் மாற்றி அமைத்த அவரது இசை ஈடில்ல இசை. அந்த தாலாட்டு அன்னைக்கு பிறகு கிடைக்கின்ற தாலாட்டு.

நேற்றைய போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை என்றதின் நீண்ட வரலாறு தான் அவருடைய தாலாட்டுகள் காட்டுகிற கால கண்ணாடி.

ஒவ்வோரு பாடலும் ஒவ்வொரு நினைவலையை ஆழ் மனதுக்குள் இருந்து கிளரி எடுத்து சில சமயம் சோகமாகவும், இளமை நிகழ்வுகலை நினைவுபடுத்தியும், எதிர்கால கனவுகளையும் என்று என்றைக்கும் பரிணாமித்து வரும் பாடல்கள்.

இன்றைக்கு இருக்கும் புதிய வாத்திய கருவிகளோ பதிவுமுறைகளோ இல்லாத நாட்களில் வெறும் மெட்டையும், வார்த்தையும், குரல்களை மட்டும் வைத்து அசத்து அசத்து என்று அசத்திய அசாத்தியமானவர்.

எண்ணிக்கைகளுக்குள் அடங்கிவிடும் எண்ணிகயில் இருந்தால் இது அது என்று தொகுத்து எழுதலாம். பட்டியலிட ஆரம்புத்தால் எதை எடுப்பது எதைவிடுப்பது என்று யோசிக்கவே ஆண்டுகள் ஆகிவிடும் ஆகவே அந்த வேலையை நிறுத்திவிடுவோம்.

கருப்பு வெள்ளையில் துவங்கி, மன்னர்கள் கதைகளில் இருந்து வண்ணத்தில் 90கள் வரையில் கேட்போருக்கு என்று அள்ளிக்கொடுத்துக்கொண்டே இருந்த மன்னர்.

இவரின் இசையின் தாக்கம் இன்னமும் ஒரு 3 தலைமுறைக்காவது இருக்கும். வானொலியும் தொலைகாட்சிகளும் தனது இரவு சேவையே இவரின் பாடல்களை பெரும்பாலும் நிறப்பித்தான் பொழுதை ஓட்டுகிறது.

இரவு வந்துவிட்டாலே தூக்கத்தை கெடுக்காவண்ணம் பாடல்கள் வேண்டும் என்றால் அது இவரது பாடல்களாகத்தான் இருக்கும். தமிழர்களின் இரவின் அமைதியாகவும் நிம்மதியுமாய் என்றைக்கும் நிறைத்து இருப்பவர். அவரின் புகழ் வாழ்க, இறைவனிடம் சேர்ந்து அவரது ஆத்துமா அமைதியடையட்டும்.......

Thursday, July 16, 2015

திமுகவால் முடிந்தது காங்கிரசால் முடியாமல் போவது ஏனோ இல்லை நடிக்கிறார்களா.....

தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த உடன் என்ன என்ன இடம் கிடைக்கும் என்று இருந்த செயலலிதாவும் அவரது தோழியும் சேர்ந்துக்கொண்டு எவ்வளவு இடங்களை அள்ள முடியுமே அவ்வளைவும் அள்ளினார்கள்.

பிறகு நன்றாக நடக்கின்ற தொழில் நிறுவணங்களை வாங்கி குவித்தார்கள். அப்படி வாங்கும் போது அடிமாட்டு விலைக்கு கொடுக்க மறுத்தவர்களுக்கு என்ன ஆனது என்று சரவணபவன் இராசகோபாலனுக்கு என்ன நடந்தது என்று அனைவரும் அறிவர்.

ஒரு முதல்வர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனது தோழிக்கு வணிபங்களை வாங்கியதும் மிரட்டி பிடிங்கியதும் தவறு என்று திமுக வழக்கு தொடுத்தது. தொடுத்த வழக்கு கொமாரசாமி உடைத்து எரியும் வரை சென்றதையும் அனைவரும் அறிவர்.

அந்நாளில் செயலலிதா செய்ததற்கும் இன்று மோடி தனது தேழர்களை எல்லா இடத்திலும் அழைத்துக்கொண்டு சென்று நாட்டுக்காக எவ்வளவு திட்டங்கள் இருக்கிறதோ அவைகளை அந்த திட்டங்களின் பெயரில் கொடுக்கிறேன் என்று கொடுக்கிறார்.

என்ன செயலலிதா செய்தது அந்த வணிப நிறுவணங்களுக்கு அவரும் ஒரு பங்குதாரர். ஆனால் மோடியோ மறைமுக பங்குதாரர். அது ஒன்று தான் வித்தியாசமே அன்றி வேறு எந்த வித்தியாசமும் இல்லை.

அன்று திமுகவிற்கு இருந்த துணிவு காங்கிரசிடம் இல்லையே ஏன், பிரதமர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார் என்று இதுவரை நீதிமன்றம் செல்லாதது மட்டும் இல்லை அறிக்கை கூட விட தயங்குவது ஏனோ அவர்களுக்கே வெளிச்சம்.

இந்தியாவில் இருக்கும் திட்ட பணிகளின் பணம் மட்டும் மோடியின் தேழர்களுக்கு செல்லவில்லை இந்தியாவின் பெயரை சொல்லி அனைத்து நட்பு நாடுகளுக்கும் சென்று சுரண்டல்கள் துவங்கியாச்சு.

அப்படி வெளி நாடுகள் கொடுக்கும் திட்டபணிகள் இந்தியாவிற்கு உதவுவதற்கும் இந்தியாவின் உதவிய நாடி நிற்கும் நாட்டு பணிகள் அவைகள். தெளிவாக சொல்வது என்றால் இந்திய அரசு பணம் மட்டும் அல்லாது வெளி நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கிடைக்கும் அத்தனை பணத்தையும் மோடி நேரடியாத தனது இணைபிரியா தோழர்களுக்கு கொடுக்கிறார்.

இவைகளை எல்லாம் தட்டி கேட்க வேண்டிய எதிர்கட்சி காங்கிரசு பேசாமல் மௌனிப்பது அவர்களுக்கும் இதில் கூட்டு இருக்குமோ என்று சந்தேகிக்க வைக்கின்றது.

காங்கிரசின் நடவடிக்கைகளை கவணிப்போம் கையில் எடுத்து போராடுகிறார்களா அல்லது எங்களுக்கு இவ்வளவு கொடுத்தால் தொடரலாம் என்று விட்டு விடுகிறார்களா என்று பார்போம்.

Tuesday, July 14, 2015

பாமகவில் குடும்ப அரசியலுக்கு இப்போது வாய்ப்பு இல்லை ஏன்

பாமகவிடம் இது சம்பந்தமாக எப்போது கேள்வி கேட்டாலும் நேரடியான பதிலை பெறவே  முடியாது அப்படியே ஏதும் சொன்னாலும் மழுப்புவார்களே அன்றி காரணமோ பதிலோ சொல்ல மாட்டார்கள்.

இவைகள் எல்லாம் ஒரே செயலில் அடக்கும் விதமாக அன்புமணி தான் முதல்வர் என்ற தீர்மானம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் பாமக.

ஏன் இந்த நிலை பாமகவிற்கு.......

மக்களின் மறதியை அரசியல் கட்சிகள் எப்படி எல்லாம் பயன்படுத்திக்கொள்கிறார்கள் பாருங்கள்.

அன்புமணியைவிடவும் வயதிலும் அனுபவத்திலும் முதியவரான மருத்துவர் ஐயா ஏன் அந்த பதவிக்கு வரவில்லை ஏன் என்றால் நாங்கள் குடும்ப அரசியலை வெறுப்பவர்கள் என்று சொல்வார்கள்.

ஒரு வேளை வெற்றி பெற்ற பிறகு மாற்றிகொள்வார்களோ என்ற பயம் எல்லாம் நமக்கு வேண்டாம்.

மருத்துவர் ஐயாவால் அந்த பதவி எல்லாம் வகிக்க முடியாது என்றதே உண்மை.....

நிலைமை அப்படி இருக்க என்னவோ தியாகம் செய்துவிட்டது போல் வார்த்தை அள்ளிவிட்டு மோடிவித்தை காட்டுகிறார்கள் பாமகவில்.

மருத்துவர் ஐயாவால் இப்போது மருத்துவராக செயலாற்றமுடியாத நிலை பாவம் அவருக்கு. காரணம் அவர் மருத்துவ படிப்புக்கு சேரும் போது பொய் சாதி சான்றிதழை கொடுத்து அல்லவா பட்டம் படித்தார்.

பொய் சான்றிதழ் என்று சட்டப்படி நிரூபித்து சான்றிதழையும் பிடுங்கியாச்சு. தேர்தலில் நிற்கும் போது தன்மேல் எந்த வித கிரிமிலன் குற்றமும் நிறுபித்தது இல்லை என்று சான்று கொடுக்க வேண்டும்........ இன்ன இன்ன இத்தியாதிகள் உண்டு. அந்த வைகயராகளில் எதுவும் இவருக்கு பொருந்தாது.

இந்த நிலையில் தான் தனது கட்டுப்பாட்டில் இருந்து கட்சி சென்றுவிடக்கூடாது என்று தனது மகனை முன் நிறுத்துகிறார் இந்த தியாகி.

சொந்த வாழ்கையிலே இவ்வளவு குத்த குறை இவர்கள் அளிக்கப்போகும் ஆட்சி அடே அப்பா இவரை போல் மிகவும் தூய்மையாகவும் நேர்மையாகவும் தான் இருக்கும் நம்புங்கள் மக்காள் நம்புங்க.......

தூய்மை இந்தியா என்று சொல்லிக்கொண்டு நடுவணில் ஒரு கூட்டம் நடுவணில் துடைத்து எடுத்துக்கொண்டு தூய்மை செய்கிறது அதே போல் தமிழகத்தையும் துடைத்து எடுத்துக்கொண்டு தூய்மை செய்ய இவர்களை தான் நாம் தேர்ந்து எடுக்க வேண்டும். ஓட்டு போடுங்கள் மருத்துவர் ஐயா குடும்பத்துக்கு..........

அன்புமணி என்ன என்றால் அமெரிக்காவுல ஒபாமா கூப்பிடாங்க, சப்பான்ல சாக்கி சான் கூப்பிட்டாங்ன்னு சொல்லிக்கொள்கிறார். அவரிடம் கேட்ப்போம், மக்களின் அத்தியா அவசிய மருந்துகளை தையாரித்து அரசு மருத்துவமகைகளுக்கு வழங்கி வந்த 4 நிறுவனங்களையும் எதற்கு இழுத்து மூடினீர்கள் என்று விளக்குங்கள் மற்றவைகளை பிறகு விசாரிப்போம்.......

பதில் சொல்வார்களா பார்ப்போம்........

பாகுபலி - திரைவிமர்சனம்

உலக திரைபடங்களை எல்லாம் பார்க்கும் போது இது போல் நம் நாட்டு படங்களும் வருமா என்ற ஏக்கம் எப்பவும் வரும். அந்த ஏக்கத்திற்கு ஈடு கொடுக்கும் விதத்தில் ஒரு பிரமாண்ட படம்.

முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரையில் அந்த பிரமாண்டம் நீண்டுக்கொண்டு வந்து இருப்பது அதிசயமே.

பொதுவாக காட்சி விரிவாக்கத்தில் மாட்டும் அவைகளை காட்டிவிட்டு பிறகு கதைக்குள் புகுந்ததும் அவைகள் நம்மை அறியாமலே மறைக்கப்பட்டு விடுவது திரைகதையில் ஒரு உத்தி.

அந்த இலக்கணங்களை எல்லாம் மீறி விளம்பரபடுத்தியது போல் பிரமாண்டத்தையும் ஒரு பாத்திரமாகவே ஆக்கி படத்தை கொடுத்ததிற்கு பாராட்டுக்கள்.

முதல் இரண்டு காட்சிகளுக்கு பிறகு நாயகன் மலையேற்றம் முதல் இடைவேளை வரை விருவிருப்பு. என்ன அந்த காதல் காட்சிகளை இவ்வளவு மிகையாக்காமல் கட்டுப்பாட்டோடு கொடுத்து இருக்கலாம். இருந்தாலும் பரவாயில்லை...

ஜேம்சு பாண்டு கணக்காக நாயகனுக்கு எல்லாம் அத்துபடி, நீருக்குள் அவ்வளவு நேரம் மூச்சுபிடிப்பதில் இருந்து மரத்தில் இருந்து மாயமாக போவது வரை.....

அரண்மனை காட்சிகளில் ஆட்கள் எல்லாம் எறும்பு போல் காட்டும் அளவுக்கு மிக பெரிய அரண்கள் ஏன் என்று தான் புரியவில்லை.

100, 200 மக்கள் சேர்ந்து இழுக்கும் கயிரை ஒரே ஆளாக இழுத்து பிடித்து நிறுத்துவது, பெரிய பாறைகளையும் மரங்களையும் கையிலே உடைப்பதும், தன்னைவிட 10 மடங்கு எடைகொண்ட எருதை கையில் பிடித்து நிறுத்துவது போன்ற அதிதீர காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.

இவ்வளவு பிரமாண்டத்தில் யானைகளும் குதிரைகளும் அதிகம் இடம் பெறாமல் போனது ஏமாற்றமே. வெகுச்சில இடங்களில் மட்டும் இவைகள் அலங்காரமாக வந்து போவது மட்டும் நெருடலாக இருக்கிறது.

முதல் காட்சியில் காட்டும் அந்த பிரமாண்ட அருவியின் நீர் எல்லாம் முகச்சொற்பனான நீர் ஓடையாக செல்வது போல் இருக்கிறது என்று உடன் உழைத்த மக்கள் யாரும் சொல்லவில்லை போலும்.

பனி பிரதேசமாக காட்டும் இடங்களில் பனிக்கான எந்த துணிமணிகளும் இல்லாமல் எல்லோரும் அப்படியே வந்து போவது இயல்பாக இல்லை....

போர்கள காட்சிகளில் இது வரை காட்டிய அம்பும் ஈட்டியும் தவிர அவைகளையும் தாண்டி காட்சி இருப்பது நல்ல சிந்தனை. இதை பார்த்துவிட்டு பீரங்கியின் கண்டுபிடிப்பு இந்தியாவில் தான் துவங்கியது என்று அரசியல் மேடைகளில் பேசமால் இருந்தால் சரிதான்.

இரம்யாவிற்குள் இத்தனை திறமையா அப்பா என்ன ஒரு கம்பீரம்...

 நிலைகெட்ட மனிதரின் நாக்கு தான் கூரிய ஆயுதம் கணக்காக நாசரின் பாத்திரம், காரணம் வலுவாக இல்லை என்றாலும் அப்படி தான் இருக்கும் மனிதமன பலவீணம் என்று காட்டி இருக்கிறார்.

இவ்வளவு குறைகளுக்கும் நடுவில் கதை முடிவுக்கு வருவது கூட தெரியவில்லை அப்படி ஒரு ஓட்டம் திரைகதையில். அடுத்த பகுதியில் இந்த குறைகள் எல்லாம் இல்லாமல் கொண்டுவருவார்கள் என்று நம்புவோமாக. வாழ்த்துகள் பாகுபலி குழுவிற்கு.....

Saturday, July 11, 2015

பிரேமம் - மளையாளபடம்

கிட்டதட்ட அட்டகத்தி போல் ஒரு படம், ஆனால் கதை பயணிக்கும் விதம் தான் வேறு.

விடலை காதலில் ஆரம்பித்து கடைசியில் திருமணம் வரை சென்று முடியும் ஒரு படம்....

என்ன அட்டகத்தியில் வரும் காதல் சாகசங்களை மிதிவணியில் சென்று செய்வதுபோல் அமைத்து இருந்தாலும், கல்லூரியில் காட்டும் காட்சிகள் அருமை.

மலர் வந்து செல்லும் வரை படம் விருவிருப்பாக செல்கிறது......

வகுப்பறையில் வரும் தாளத்தை இரசித்தபடி இருக்கும் மலர் வகுப்பு சென்றதும் மாணவர்களை அவர்கள் போக்கிற்கு விட்டுவிடுவார் என்று தான் ஒரு எதிர்பார்ப்பு. ஆனால் வெளியே போ என்று சொல்லும் காட்சிகள் அழகு.

உடன் வேலை செய்யும் அந்த விரிவுரையாளர் செய்யும் செயல்கள் தாங்க முடியாத சிரிப்பு.......

 நட்ட நடுக்காட்டில் இருப்பது போல் ஒரு கல்லூரி என்ன இயற்கையான சூழல் கேரளத்தில், எங்கள் கல்லூரி இருந்த பொட்டல் காடு நினைவுக்கு வந்து போவது தவிர்க முடியவில்லை.

கிட்டதட்ட ஒரு தலை இராகத்தில் வரும் கல்லூரி போல் ஒரு கல்லூரி காட்சி அமைப்புகள்......

என்ன ஒரு தலை இராகத்தில் குடித்துவிட்டு வகுப்பிற்கு வருவதாக காட்சி இருக்கும், இங்கே வகுப்பில் வந்து உட்கார்ந்ததும் குடிக்க துவங்குவதாக காட்டுவதும். அந்த செய்தியை அவனின் அப்பாவிடம் சொல்ல இந்த மாதிரி சின்ன செயலுக்கு எல்லாம் இனிமேல் என்னை கூப்பிடாதீர்கள் என்று கூச்சலும் அதட்டலும் செய்துவிட்டு செல்வது தான் இத்தனை ஆண்டு முன்னேற்றங்கள் போலும்.......

பாடல்கள் அருமை அதுவும் துவக்கத்தில் வரும் அந்த ஆறோடு பாட்டு அருமை.......

வகுப்பில் காட்டும் JAVA பாடம் அருமையான காட்சி...... இப்படி தான் இப்போது எல்ல கல்லூரிகளிலும் பாடம் எடுக்கிறார்கள் போலும்.....

சிலருக்கு என்ன தான் முயற்சித்தாலும் காதல் கைகூடுவது இல்லை..... இவனுக்கும் அப்படி தான் போலும்.......

 நல்லபடம், உங்களுக்கு பாக்கியதேவதா பிடித்து இருந்தால் இந்த படமும் பிடிக்கும்..........கொஞ்ச நாளில் தமிழில் மீண்டும் வந்தாலும் வரலாம்........

நடிகர் விவேக்கிற்கு அதிமுக மேல் அப்படி என்ன கோபம்

பாலகாட்டு மாதவன் படம் இதில் அம்மாவை தத்து எடுக்கிறேன் என்று சொல்லி என்ன என்ன கேளி செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்துள்ளார். என்ன அவர் பிணையில் வெளியில் வரமாட்டார் என்று நினைத்து படமாக்கி இருப்பார் போலும்.

உணவில் இருந்து பழக்க வழக்கங்கள் வரை என்ன என்ன பகிடி செய்ய முடியுமோ அவ்வளவும்.....

ஒரு வயதானவரை வைத்து இவ்வளவு நகைச்சுவை தேவை தானா.....

அடுத்தவரின் இயலாமை தான் நமக்கு நகைச்சுவையா.......

முதுமை எல்லோருக்கும் உண்டு உங்களையும் சேர்த்துத்தான் ஒருவரும் தப்பிப்பதற்கு இல்லை.........

அதுவும் எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் ஒரு வயதான பெண்ணை வைத்து இது எல்லாம் தேவை தானா விவேக்.............

பதிவர்கள் ஒருவரும் அந்த படத்திற்கு விமர்சனம் எழுதாமல் இருப்பதே நல்லது...........

இனியாவது நல்ல கரு கொண்ட படங்களில் நடிக்கவும், வீட்டுக்கு ஆட்டோ இன்னும் வராமல் இருந்தால் நல்லது...........

Tuesday, July 7, 2015

பாபநாசம் -- கமலுக்கு முழு திருப்தியாக அமைந்த படம்

இந்த படத்தின் விமர்சனங்களில் அதிகம் பேசப்படும் பொருள் அசலைவிட அருமை என்று ஒரு புரம் மறுமையில் இல்லவே இல்லை என்றும் பேசப்படுகிறது.

அசலை பார்த்தவர்கள் சொல்லும் நுணுக்கமான வித்தியாசங்களும் அப்படி தான், உதாரணமாக அசலில் என்ன நடந்ததுன்னு சொல்ல இல்லை இனி உங்க அப்பா அம்மாவை பார்க்க முடியாது என்று அந்த சிறுமியை மிரட்டும் காட்சிக்கு அடுத்து வரும் அந்த நெகிழ்வு மன்னிப்பு காட்சிகள் தமிழில் இல்லை. அழகாக சுருக்கமாக அசலில் வரும் வசனமும் சரி நடிப்பும் தமிழில் இல்லை.

அசலில் வரும் டீக்கடை காட்சிகளில் அப்படி ஒரு வறட்சி காட்சியிலும் சரி வசனத்திலும் சரி.

அசலில் தேக்கடி என்று ஒரு 100 தடவையாவது சொல்லி இருப்பார்கள், தமிழில் தவிர்த்துவிட்டார்கள். அசலில் விசாரணையில் முதல் சுற்றுக்கு பிறகு என்ன நடக்கும் என்று கேட்கும் காட்சியில், இல்லை மீண்டும் வருவார்கள் என்று சொல்லி விளக்கும் காட்சிகளிலும் தமிழில் அப்படி ஒரு வறட்சி. அசலில் அந்த அப்பா காட்டும் அக்கரையிம் பாசமும் தமிழில் இல்லை.

படம் ஒரு கட்டத்திற்கு மேல் மகாநதியின் இரண்டாம் பாகம் பார்ப்பது போல் இருக்கிறது. மூத்த மகளின் பாத்திரத்தின் குரலில் அப்படி ஒரு பஞ்சம். போராளி படத்தில் தெளிவாக வந்த அந்த குரல் எங்கே போனதோ அவர்களுக்கு தான் வெளிச்சம்.

படபிடிப்பு துவங்கிய உடன் வந்த விமர்சனங்களை எல்லாம் வைத்து பார்க்கும் போது உன்னை போல் ஒருவன் போல் ஒரு இந்திய தாலிபான் பாசக பரப்புரை படமாக இருக்குமோ என்றும் கூட பயமாக இருந்தது. நல்ல வேளை அப்படி எல்லாம் ஒன்றும் நடக்கவில்லை.

கமல் பேசும் வட்டார வழக்கு மைகேல் மதன காமராசன் படத்தின் காமேசுவரன் பேசுவது போல் இருக்கிறது.

இந்த மாற்றங்களை தவிர்த்துவிட்டு பார்த்தால், காட்சிக்கு காட்சி, வசனத்திற்கு வசனம் அப்படியே தமிழில் எடுத்து இருக்கிறார்கள். கமலின் மாமா வீட்டில் திருமணத்தின் போது சீர் எதுவும் பெரிதாக செய்யவில்லையே என்ற பேச்சுகளை எல்லாம் ஏன் வெட்டி விட்டார்கள் தமிழில் தெரியவில்லை. மச்சானுக்கும் மானனுக்கும் நடக்கும் அந்த நெகிழ்வான வசனம்மும் அந்த பையனின் உடல் என்ன ஆனது என்ற கௌதமியின் கேள்விகளுக்கு பதிலும் ஏன் தமிழில் தவிர்த்துள்ளார்கள் என்று தெரியவில்லை.

மோகன்லாலின் கண்களின் நடிப்பும், சந்தர்பங்களி வரும் அசட்டு சிரிப்பும் தமிழில் இல்லை என்றது தான் உண்மை ஒரு வேளை கமலின் தகுதிக்கு அவைகள் தேவை இல்லை என்று விட்டிருப்பர்கள் போலும்.

தாம்பத்திய விவகாரங்களை மிகவும் அழகாக அசலில் காட்டி இருப்பார்கள், அவர்கள் இன்னமும் இளம் தம்பதிகள் என்று காட்டும் விதமாக. அவைகள் அனைத்தையும் தமிழில் தொடைத்து எடுத்துவிட்டார்கள். ஒரு வேளை கௌதமிக்கு பதில் வேறு யாரோவாக இருந்தால் புன்னகை மன்னன் முத்த காட்சிவரை காட்டி இருப்பார்கள் போலும்.

சரி தலைப்புக்கு வருவோம், இது வரை கமலிம் படம் வந்தால், இந்த காட்சி, வசனம், கதை இந்த படத்தில் இருந்து எடுத்தது அப்படி இப்படி என்று எல்லாம் விமர்சனங்கள் வரும்.

ஆனால் இந்த படம் அந்த ஒட்டு மொத்த விமர்சனங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டது. இந்த விமர்சனங்கள் இல்லாத படம் என்று கமல் முழு திருப்தி அடைந்து இருப்பார்.