Tuesday, January 14, 2014

இலே மிசரபா -- 2013ன் ஆசுகர் தட்டி செல்லுமா (Les Miserables)

இந்த படத்தின் மேல் அப்படி என்ன காதலோ இவர்களுக்கு. எத்தனை முறை எடுப்பார்கள் இந்த படத்தை, இதோ இன்னும் ஒரு வடிவம், நாட்டிய நாடகமாக.

இத்தன் முந்தைய வடிவத்திற்கும் இதற்கும் கதையிலும் சம்பவங்களிலும் சில மாறுதல்கள் மட்டுமே. என்ன அற்புதமாக வந்திருக்கிறது படம்.

பொதுவாக ஏற்கனவே பார்த்த ஒரு படத்தை மீண்டும் பார்க்கும் போது சலிப்பும் அடுத்து என்ன நடக்க போகின்றது என்று தெரிந்து இருப்பதால் என்ன என்று இருக்கும். ஆனால் இந்த படம் பார்க்கும் போது இவைகள் இரண்டும் வராமல் நம்மை படத்தின் கடைசி வரை மிகவும் கவனமாக நகர்த்தி செல்கிறார்கள் பட குழுவினர்கள்.

படத்தில் வசனம் வரும் இடங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் அவ்வளவும் பாடல்களே, ஒன்று கூட சுமார் என்று சொல்லும் விதமாக இல்லை.

எனக்கு மிகவும் பிடித்தது Look Down இந்த பாடலே. பிரஞ்சு புரட்சி துவங்கும் காட்சியில் துவங்கும் இந்த பாடல், எத்தனை எத்தனை காட்சி இடங்களும் பாத்திரங்களும் என்று காட்சியும் பாடலும் போட்டி போட்டு கொள்ளும் பாடல் இது.

ஒரு கூட்டமே பாடும் இந்த பாடலில் அப்படியே அந்த காட்சி மனதில் பதிந்துவிடும், பாடல்களின் வரிகளில் இன்னும் எந்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே கருத்துகள் ஒலிப்பது ஆச்சரியமாக இருந்தது.

அந்த கால காட்சி அமைப்பும், பாடல்களும், ஒளிப்பதிவும் நிச்சயம் விருதுக்கு உரியவையே. எனக்கு கதையின் நாயகனாக நடித்தவரையும் வில்லனாக நடித்த இருவரையும் பாத்திரத்துடன் இணைத்து பார்க்க முடியவில்லை. இதன் முந்தைய வடிவத்தில் இவைகள் இரண்டும் அப்படி பாத்திரத்துடன் ஒன்றி இருந்தது, ஆக இவர்கள் கேட்டு இருப்பது போல் 8 விருதுகள் வாங்குவதற்கு இல்லை, மேலே சொன்ன 3 நிச்சயம்.

ஆனால் போட்டிக்கு என்று ஒசாமா பின்லேடனை கொன்றதை அடிப்படையாக கொண்ட படமும் போட்டியில் நிற்கிறது. இந்த வகையராவில் பார்த்தால் ஒசாமா படம் மிகவும் சாதாரண படம் தான், இருப்பினும் இதன் இயக்குனர் Hurt lockerக்கு வாங்கியது போல் இதற்கும் வாங்கினால் அச்சர்யபடுவற்கு இல்லை.

தூம் - 3ம் ஆங்கிலப்படம் The prestigeம்

தூம் படம் துவக்கத்தில் இருந்து கடைசிவரை இந்த ஆங்கிலப்படத்தை அப்படியே எடுத்து இஒருக்கிறார்கள். என்ன கதையில் ஒரு சின்ன மாற்றம் ஆங்கிலத்தில் கூடவே இருப்பவன் தான் எதிரி, இந்தியிலோ வங்கியை எதிரியாக்கியை எடுத்து உள்ளார்கள் அவ்வளவுதான்.

அரங்கங்களும் அப்படியே ஆங்கிலப்படத்தில் உள்ளது போல் அமைத்துள்ளதை பார்க்கமுடியும்.

ஆங்கிலத்தில் பல திருப்பங்களை கொண்டு திரைக்கதை அமைத்து இருப்பார்கள். இந்தியிலோ ஒரு சில திருப்பங்கள் மட்டுமே அதுவும் கடைசியில் இரகசியம் என்று அமீர் நினைத்ததை கத்ரீனா போட்டு உடைப்பது பரிதாபமான காட்சி.

Source Code என்று ஒரு படம், அதிலே சிக்காகோவிற்கு 10 மைல் தொலைவு வரை இருக்கும் தெற்கு இரயில் பாதையின் நிறுத்தங்களும் மற்றும் 3 அல்லது 4 அரங்குகள் மட்டும் கொண்டு மிகவும் அற்புதமாக படமாக்கி இருப்பார்கள்.

அது போல் மிகவும் கவனமாக மிக சொற்பமான வெளிபுர படபிடிப்புகளை மட்டும் கொண்டு மற்ற எல்லாம் உள்ளரங்கிலேயே அழகாக எடுத்து சிக்கனமாக முடித்து இருக்கிறார்கள்.

என்ன இந்திய திரையினருக்கே உள்ள இலக்கணத்தின் படி அமெரிக்க காவல் துறையும் இன்னமும் இருக்கும் மக்கள் எல்லாம் முட்டாள்கள் என்றும் அபிசேக்கு தான் உலகிலேயே அறிவு உள்ளவர் என்றும் கண்பிப்பது தான் சகிக்கவில்லை., வேடையாடு விளையாடிவில் இராகவனை காட்டுவது போல்.

சிக்காகோவில் கதை நடக்க திடீர் என்று ஊவர் அனையில் கடைசிக்காட்சிகள் வருவது ஏனோ என்று அவர்கள் தான் சொல்ல வேண்டும்.

அது மட்டும் இல்லாது, சிக்காகோ என்று எந்த படத்தில் காட்டினாலும் அந்த மிச்சிகன் ஏரியில் இருந்து அழகான நீல வானமும் கடல் போல் காட்சியளிக்கும் அந்த ஏரியும் மட்டும் அல்ல எந்த ஒரு சிக்காகோ அடையாளத்தையும் காட்டாமல் விட்டதுவும் ஏனோ என்று அவர்கள் தான் சொல்ல வேண்டும்.

இவ்வளவு இருந்தும் படம் வசூல் அள்ளுவது ஆச்சரியமாக இருக்கிறது.......