Saturday, June 15, 2013

இசையை தவிர மற்ற எல்லா செய்கைகளுக்கும் அதிகம் விமர்சிக்கபடும் இசையமைப்பாளர் இளையராசா

ஒரு தனிமனிதனாக இளையராசா விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை தான், அதுவும் இசையமைப்பாளராக விமர்சனத்திற்கு ஆளாவதே அவரது கடமையாகவா ஆகிவிட்டது இந்த காலங்களிலில். அதுவும் இத்தனை ஆண்டு காலமாக இவைகளை எல்லாம் அதிகம் கவனம் செலுத்தாமல் இருந்தவர், அன்மைகாலங்களில் இவர்களுக்கு ஒன்று இருவர்களுக்கு பதில் சொல்லப்போக. வர போகின்றவர்கள் எல்லாம் அவர் மீது தனது வன்மத்தை பொழிவதும் அதன் மொழிகளும் நமக்கே இவ்வளவு வேதனையாக இருக்க மனிதர் என்ன பாடுபடுவாரோ அவருக்கே வெளிச்சம்.

இராசாவை வெறுத்து விமர்சனம் செய்யும் மனிதர்களில் 98% மக்கள் அவரின் இசையை எதுவும் சொல்வது இல்லை மாறாக அவரின் பேச்சையும் பேட்டியையும் மட்டுமே குறிப்பிட்டு பேசுவது கொடுமையே.

அந்த 2% மக்களின் விமர்சனம் இப்படி இருக்கும், இராசாவின் இசையில் அப்படி என்ன குறை கண்டீர்கள் என்று கேட்டால் அவரது இசை ஒரு டெம்புலேடட்(Templated)  இசை இன்று நுட்பமாக சொல்லுவர் ஒரு சாரார்.

அது என்ன கட்டம் கட்டிய இசை என்று இவர்கள் சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

ஒரு பாடல் பல்லவி அனுபல்லவி சரணம் என்ற வடிவினை கொண்டதாக அமையும். இவைகளுக்கு இடையில் வார்த்தைகளுக்கு பதில் காட்சிகளுக்கு ஏற்றார் போல் இசைவடிவங்களை கொடுப்பது தான் திரை இசைப்பாடலின் வடிவமாக அமையும். திரை இசை என்று இல்லை எந்த இசையாக இருந்தாலும் பாடலோடு சேர்ந்து வரும் போது, பாடலுடனும் பாடலுக்கு நடுவிலும் என்ற இடைவெளி இல்லாமல் அனேகமாக எந்த பாடலும் இருக்க வாய்பே இல்லை. அது எந்த ஊர் இசையாக இருந்தாலும் சரி எந்த பாரம்பரிய இசையாக இருந்தாலும் சரி.

இன்றைய காலத்தில் புதிது என்று கொண்டாபடும் இராப்பு இசையாக இருந்தாலும் தொடக்க இசை, பல்லவி அனுபல்லவி சரணம் என்று தான் அமையும். தேவைக்கு ஏற்றார்போல் அனுபல்லவியை கொள்ளாமல் விடுவது உண்டு. ஆனால் எப்படி பாடல் துவங்குகிறதோ அதே ஓட்டத்தில் கொண்டு வந்து முடிக்கும் ஒரு வட்டமுறை அனைத்து இசை வடிவங்களிலும் உண்டு. வெறும் வாத்திய இசையாக இருந்தாலும் சரி, அல்லது பாடலாக இருந்தாலும் சரி, இல்லை பாடலுடன் கூடிய இசையாக இருந்தாலும் சரி அதன் வடிவம் இப்படி தான் இருக்கும் இருக்கிறது தொன்று தொட்டு இருக்கிறது.

இதில் இராசாவின் எந்த இசையை கட்டம் கட்டிய இசை என்று சொல்கிறார்கள் என்று இந்த விமர்சகர்கள் சொல்வது இல்லை மாற்றாக இது டெம்புலேடட் இசை என்று மட்டும் சொல்வார்கள். கம்பனின் கவியில் குற்றம் என்று சொன்னார்களே அந்த மாதிரி.

இது ஒரு முறை விமர்சனம் என்றால், மற்றவர்கள் இராசாவின் இசை காலத்திற்கு ஏற்றார் போல் இல்லை என்றும் இன்னமும் பழையவைகளை வைத்துக்கொண்டு காலம் ஓட்டுகிறார்கள் என்று நையாண்டியாக சொல்வார்கள்.

இது கிட்டதட்ட தமிழை பழிப்பது போல் செய்யும் செயல், தமிழ் என்று இல்லை எந்த மொழியையும் இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

இசை ஒரு மொழி, அந்த மொழியை கொண்டு காவியம் படைக்கலாம், கவி பாடலாம், கட்டுரை எழுதலாம், இயல் இசை நாடகம் என்று எத்தனை எத்தனை வண்ணகளில் படைக்கலாமோ அத்தனையும் படைக்கலாம். அவைகள் எல்லாம் படைக்கப்படுவது அந்த மொழியில் எத்தனை வண்ணங்களில் வந்த போது அது தமிழ் படைப்பு என்று வருவது போல், இராசாவின் படைபுகளில் எத்தனை வண்ண மாற்றங்கள் கொண்டு வந்தாலும் அது இசை மொழியில் ஒரு படைப்பு.

விமர்சனங்களில் நாடகம் என்றால் இப்படி ஒரு இலக்கணம் இருக்கிறது இவர் நாடகம் எழுதியுள்ளார் பாருங்கள்  நாடகத்தின் எந்த இலக்கணத்திலும் வராமல் இருக்கும் இதை போய் நாடகம் என்று நம்மை ஏமாற்றுகிறார் என்றா சொல்லலாம். இல்லை ஒன்றுமே படைக்க தெரியவில்லை ஆனால் அவரை போய் கம்பனை போல் நிறைய கற்பனை கொண்டவர் என்றோ அல்லது அரிய படைப்புகளை கொடுத்தார் என்றோ சொல்கிறீர்கள் என்று விமர்சித்தால் கூட பரவாயில்லை.

அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் இவைகள் தான், மாற்றாக ஒரு இசை வடிவம் வந்துவிட்டது. அந்த இசை இவர் கொடுக்கும் இசையை விட வித்தியாசமாக இருக்கிறது. மனதுக்கு பிடிக்கின்றது மக்கள் அந்த வித்தியாசமான இசையை விரும்பி இரசிக்கிறார்கள்.

இப்படி ஒரு மாற்றம் தான் இராசா உள்ளே வந்த போதும் நிகழ்ந்தது என்று இராசுக்கே நன்றாக தெரியும். எந்த நாளிலும் இப்படி ஒரு மாற்றம் வரும் என்று தெரிந்து தான் புதிது புதிதாக கொடுத்துக்கொண்டே இருக்கிறார் இராசா. இராசா மட்டும் இல்லை அத்தனை படைப்பாளிகளுக்கும் இப்படி ஒரு கட்டாயம் உண்டு.

இந்த மாற்றத்தை இராசா எப்படி அனுகிறார், மாற்றங்களை அப்படியே உள் வாங்கி அந்த முறையில் இசை கொடுக்கு துவங்கினால் நிராகரிப்பட்டிபார் வெகு விரைவில். மாறாக அந்த புதிய முறைகளை உள்ளடக்கி தனது கலவையாக கொடுத்துக்கொண்டு இருக்கிறார் இப்பவும்.

இராசா திரையிசையை துவங்கிய காலத்தில் டிசுகோவும் பாப்பும் ஆகிராமிப்பு கொண்டிருந்த காலகட்டம். இவைகளூடாக இந்திய பாரம்பரிய இசை, மண்ணின் இசை என்று எல்லா விதத்திலிலும் வண்ண வண்ணமாக அள்ளி கொடுத்து வந்தார் இராசா.

மேற்கில் ஏற்பட்ட வீழ்ச்சியும் புதிதாக இசை வடிவங்களை அறிமுகபடுத்தாமலும் இருந்த தேக்கம் இராசாவை இருந்த இந்த முறைகளுக்குளே போதும் என்று தான் இருந்துவிட்டார் போலும்.

என்னத்தை புதிதாக செய்வது என்று இருக்கும் நிலையில் இசையை துல்லியமாக ஒலிக்க செய்யும் எண்முறை பதிவில் துவங்கியதில் மாற்றம்.

இந்தியர்களுக்கு என்று இல்லை அனைத்து மக்களுக்குமே மனதுக்கு இருக்கும் ஒரு பெரிய குறை இருப்பதை பார்த்த பிறகு இல்லதவைகளை மனதில் கொண்டு ஏங்குவது. உதாரணமாக பணக்காரனை கேட்டால் ஏழை கவலையில்லாமல் தூங்குவதை காட்டி வருத்தம் கொள்வான். ஏழையை கேட்டால் எதை பற்றி நான் கவலைகொள்ள போகிறேன் எனக்கு என்ன வீடா வாசலா என்று சொல்வான்.

அது போல் தமிழர்கள் என்ன தான் நல்ல உணவு வீட்டில் கிடைத்தாலும் பீட்சா இல்லையே என்று கவலை கொள்ளும் பழக்கம் கொண்டவர்கள். ஆங்கிலப்பாடல்கள் மாதிரி வேண்டும் அதுவும் தமிழ் வார்த்தைகளை கொண்டு அதுவும் தனது கனவு நாயகன் நாயகி நடித்து கொடுக்கவேண்டும் என்று கனவு அவனுக்கு.

அந்த கட்டத்தில் ஆங்கிலபாடல் மாதிரி எல்லாம் இல்லை அதே பதிவு தரத்தில் அதே தாளங்களில், கிட்டத்தட்ட டப்பிங் படங்கள் கொடுப்பது போல், ஏற்கனவே எடுத்த படத்தில் தமிழில் மட்டுமே மாற்றி கொடுப்பது போல். மேற்கத்திய இசையில் தமிழ் பாடல்கள் வத்தது தான் அந்த மாற்றம். இந்த மாற்றம் இராசா வந்த புதிதில் நடந்தவைகளே.

ஜுனூன் தமிழ் என்ற ஒரு வழக்கு சென்னையில் பேசி நையாண்டி செய்வார்கள். எங்களுக்கு தமிழ் படங்களே போதும் என்று மார்தட்டிய தமிழர்கள் இன்று இந்தி தொடர்களை தமிழில் மாற்றி இரசிப்பது போல் அன்றைக்கு அந்த புதிய இசையை தமிழர்கள் கொண்டாடினார்கள்.

நண்பர் ஒருவர் ஒரு அமெரிக்கரிடம் இப்படி கேட்டார் இந்திய இசையை கேட்கிறீரா என்று. அவரும் சரி கேட்போம் என்றார் அந்த புதிய இசையை நண்பரும் பாடவிட்டு எப்படி இருக்கிறது என்று கேட்டார். அதற்கு அந்த அமெரிக்கர் சிரித்துக்கொண்டே கேட்டார் இதுவா இந்திய இசை என்று.......

அந்த பாடல் ஒரு கலப்பிசை தான், முழுவதும் மேற்கத்திய இசை இல்லை, இருந்தாலும் பாடலின் தாளம் அமைப்பு அது கேட்டவுடன் மேற்கத்திய பாடல் என்ற தோற்றதை கொடுத்தது. அந்த அளவிற்கு இருந்ததை தான் இல்லாததை கொண்டாடும் மனிதனின் தேவைக்கு தீனி போட்ட மாற்று இசையாக பரிணாமித்தது அந்த புதிய இசை.

இப்படி ஒரு ஒப்பீடு சொல்லலாம், வைரமுத்துவை ஜுனுன் தமிழில் ஒரு தமிழ் பாடலை எழுதவைத்து அந்த பாடலை இரசிக்க சொன்னால் எப்படி இருக்கும் அப்படி ஆகி இருக்கும் இராசாவும் பாடல்களை அந்த புதிய முறையில் கொடுத்து இருந்தால்.

இராசாவிடம் அதிகம் எதிர்பார்த்து ஏமாற்றம், இவர்கள் அதிகம் எதிர்பார்த்தது அடிகின்ற காற்றின் திசையில் பயணிக்காமல் தான் செல்லும் திசையிலே சென்ற இராசாவின் போக்கு இந்த இரசிகர்களை ஏமாற்றம் கொள்ள வைத்துள்ள எரிச்சலில் இப்படி எல்லாம் இராசாவை இகழ்ந்து அவர்களை சமாதானப்படுத்தி கொள்கிறார்கள்.

இந்த 2% மக்களை தவிர மற்ற அனைவரும் அதே எரிச்சலில் தான் இராசாவை இகழ்கிறார்கள். இவர்களின் இகழ்ச்சிக்கோ புகழ்சிக்கோ ஆளானவர் இல்லை இராசா. இசையை நேசிக்கும் அவரை நேசிக்கும் மனிதர்களையும் தரமாக விமர்சிக்கும் மனிதர்களையும் மட்டுமே அவர் கருத்தில்கொள்வார். ஆகவே இந்த மாதிரியான விமரனங்களை தூர தள்ளி  வைத்துவிட்டு நமது வேலையை பார்ப்போம்.

Friday, June 7, 2013

After Earth - திரைவிமர்சனம்

இந்த படத்தின் முன்னோட்டம் படம் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை தூண்டியது. அப்படி எக்கச்சக்க எதிர்பார்ப்பில் சென்றபடம் என்றதாலோ என்னவோ கொஞ்ச நேரத்திலே அலுப்பு தட்ட துவங்கிவிட்டது.

படத்தின் கதையும் சரி திரைக்கதையும் எளிதில் ஊகிக்ககூடியவைகளாகவே அமைந்து இருப்பது கொடுமை. படத்தின் பிரமாண்டம் என்றால் அது இசை மட்டுமே. அந்த இசைமட்டு இல்லாமல் இருந்து இருந்தால் படம் Star Warsசை தொலைக்காட்சியில் பார்த்தது போலாகி இருக்கும்.

கதை எங்கோ ஒரு வேற்று கிரகனத்தில் இருக்கும் ஒரு மனித குடியிருப்பின் வீரனின் குடும்ப விவகாரங்களை சொல்லும் படம். புவியிலிருந்து அங்கு சென்றார்களா என்று தெளிவாக சொல்லப்படவில்லை, ஆனால் அந்த வேற்றுகிரக மிருகத்தால் தாக்கப்பட்ட தனது குடும்பத்தின் மிச்ச மீதியோடு வாழும் வீரன், அந்த மிருகங்களை வேட்டையாடும் நாயகனாக வலம் வருகிறான்.

அவனுடைய மகன் காளைபருவத்திற்கு தயாராக இருக்கும் தருவாயில் படையில் அவனை இந்த ஆண்டு சேர்த்துக்கொள்ள முடியாது என்று திருப்பி அனுப்பும் தருவாயில் அவனது அப்பா நெடுநாளைக்கு பிறகு வீடு வருகிறார்.

வந்தவரிடம் தனது ஏமாற்றத்தை பகிர்ந்துகொள்ளும் சிறுவனுக்கு ஆருதல் மட்டுமே சொல்லும் தந்தை மேலும் ஏமாற்றம் தர நொந்து போகிறான்.

ஆருதலுக்காக அவனை உடன் அழைத்து செல்லும் தந்தை ஒரு விண்வெளி புயலில் மட்டி அவர்களது விண்களம் புவியில் விழுந்து நொருங்குகிறது.

புவியில் மனிதனை தவிர மற்ற விலங்குகள் இருப்பதாக காட்டுவது வித்தியாசமாக இருக்கிறது. மனிதனை மட்டுமே அழிக்கும் அந்த கொடிய விலங்கு அதிகம் இருக்கும் புவி என்று சொல்லும் கதையில் கடைசிவரையில் ஒரே ஒரு விலங்கை மட்டும் காட்டுவது ஏமாற்றமாக இருக்கிறது. பயத்தை மட்டுமே அறிந்துகொள்ள கூடிய விலங்கு மற்ற மனிதற்களை மரத்தில் மாட்டி மிரட்ட நினைப்பதாக சொல்வது நம்பும் படியாக இல்லை.

மேலும் இரவில் கடுங்குளிர் என்று சொல்வதும் முரணாக வெப்பவெளி விலங்குகளும் பறவைகளையும் காட்டுவது, ஆங்காங்கே இருக்கும் இரவு வெம்மை பகுதிகள் என்று சொல்லிவிட்டு ஒரு பள்ளத்தாக்கு முழுவதும் காட்டெருதுகளை காட்டுவதும் இரசிக்கும் படி இல்லை.

இப்படி கதையிலும் திரைகதையிலும் நிறைய கண்டுபிடித்து சொல்லும் வகையில் இந்த படம் ஒரு ஏமாற்றம். அதுவும் மனோச்சு சியாமளான் படமா என்று கேட்கும் அளவிற்கு பெயரை கொடுத்துகொள்ளும் அளவிற்கு சென்று இருக்கிறது படம்.

அடுத்த படத்திலாவது தனது முதல் படம் போல் மீண்டும் ஒரு படத்துடன் மீண்டு வருகிறாரா என்று காத்து இருப்போம்.