Sunday, June 24, 2012

பெட்நாவில் என்ன நடக்கும் - ஏன் பெட்நாவில் கலந்துகொள்ள வேண்டும்

பெட்நாவில் நடக்கும் எல்லா நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வது கடிணமே.

காரணம் சில நல்ல நிகழ்ச்சிகள் விழா அரங்கிற்கு வெளியில் சத்தம் இல்லாம் நடைபெறும் அவைகளை எத்தணையோ முறை தெளிவாக அறிவித்தும் மக்கள் அங்கு எல்லாம் செல்லாமல் இருப்பது கொடுமை தான்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், அமெரிக்காவில் தொழில் நடத்திக்கொண்டு வெற்றி நடை போடும் இளைஞர்களைக் கொண்டு வருடம் தோரும் ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. சுய தொழில் முனைவோருக்கும் முனைய நினைக்கும் மக்களுக்கும் ஊக்குவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சிகள் நடக்கும்.

எப்படி எல்லாம் முயற்சித்தார்கள், என்ன நிலைகளில் எல்லாம் சமாளித்தார்கள் என்று அவர்கள் கூறும் அனுபவங்கள் நமக்கும் நல்ல பாடமாகவும் அமைவதுடன் நில்லாமல் அப்படியே ஆனாலும் கூட இப்போது இப்படி இருக்கிறோம் என்று தைரியம் ஊட்டும் அந்த நல்ல உள்ளங்களை சந்திக்கவாது அங்கு மக்கள் செல்ல வேண்டும்.

அங்கு, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் தங்களது புதிய பொருட்களையோ, அல்லது பயிற்சி முறைகளை கற்றுக்கொடுக்கவோ வந்திருக்கும் புதியவர்களையும் நமக்கு அறிமுகப்படுத்துவார்கள்.

உலக தமிழர் இயக்கத்தின் கூட்டம் நடக்கும் அங்கு எல்லோருக்கும் அனுமதி இல்லை, முடிந்தால் கலந்து கொள்ளுங்கள். அங்கே ஈழம் சார்ந்த காரியங்கள் அலசப்படும். பொறுமையுடனும் பொறுப்புடனும் பேசவும், நடந்துகொள்ளுங்கள். நீதிக்கும் அநீதிக்கும் நமக்கு வித்தியாசம் தெரியவேண்டும்.

மத்திய மற்றும் இரவு உணவு அருந்தும் இடத்தில் விழாவின் முக்கிய புள்ளிகளை சந்திப்பது கடினமே அப்படி வாய்ப்பு கிடைக்கும் பொழுது கட்டாயம் அவர்களிடம் பேசுங்கள். உங்களுடன் எந்த தயக்கமும் இல்லாமல் அருமையாக பேசுவார்கள். சந்திராயன் அண்ணாதுறையை சாப்பிட விடாமல் பத்திரிக்கை நண்பர்கள் செய்த நீதியற்ற காட்சிகள் இன்றும் கண்ணில் நிற்கிறது.

விழாவிற்கு வரும் நடிகர் நடிகைகளை எல்லாம் சாதாரணமாக நினைத்துக்கொண்டு அவர்களுக்கு எல்லாம் என்ன தமிழ் தெரிந்து இருக்கும் என்று தப்புக்கணக்கு போட்டு முடிவுகட்டி விடாதீர்கள். திரை நட்சத்திரம் என்ற வளைவுக்கு உள் நாங்களும் தமிழர்கள் என்ற உணர்விலும் தமிழின் மீது கொண்ட பற்றுடன் வருபவர்கள். நக்கல் அடிக்காதீகள், பதிலாக நல்ல கேள்விகளாக கேளுங்கள் பொறுப்புடனும் தெளிவாகவும் அவர்கள் சொல்லும் பதிலை கேட்டதற்கு பிறகு தெரியும் என்ன சொல்கிறேன் என்று. உதாரணமாக  நடிகை செயசிறீயை(ஜெயஸ்ரீயை) சொல்லாம். என்ன தமிழ் உச்சரிப்பு.............

மூன்றாம் நாள் காலையில் முழுக்க முழுக்க இலக்கிய நிகழ்ச்சிகள் தான். மிகச் சிறந்த நிகழ்ச்சி என்றால் அது இதுவாகத்தான் இருக்கும். கவியரங்கம் மற்றும் இலக்கிய விவாதங்களும் நடக்கும். முதல் இரண்டு நாட்கள் விழா நடக்கும் அரங்கில் இல்லாமல் எளிமையாக வேறு எங்காவது வைத்து இருப்பார்கள் முதல் நாளே விசாரித்து தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். கால தாமதம் இல்லாம் துவங்கிவிடும் ஆகவே சரியான நேரத்தில் சென்றுவிடுங்கள்.

விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு தெரியும் என்ன சொல்கிறேன் என்று, விழா முழுக்க நம்முடன் பேசும் ஒழுங்கு செய்யும் தொண்டர்களையும் அவர்களது உபசரிப்பை பாருங்கள், நம்மவீட்டு கல்யாணத்தில் கவனிப்பது போல் கவனிப்பார்கள். அவர்களின் தொண்டை பாராட்டுங்கள், தவறியும் எங்கேயும் ஒரு சுடு பேச்சையும் கேட்கவும் முடியாது சுடு முகத்தையும் பார்க்கவும் முடியாது.

முதல் முதலில் கலந்துகொள்பவர்கள் அடுத்த ஆண்டு கட்டாயம் கலந்துகொள்வோம் என்ற முடிவுடம் ஊர் திரும்புவது நிச்சயம்.


முக்கியமாக பதிவர்களது கூட்டமும் பட்டறையும் இருக்கும் கட்டாயம் கலந்துகொள்ளுங்கள். பழமைபேசி, மயிலாடுதுறை சிவா தவறாமல் கலந்துகொள்வார்கள். அறிமுகமாகிக்கொள்ளுங்கள்.........

விழாவை பற்றி நேரடி வருணனை பதிவுகளில் வரும், நீங்களும் உங்களது பதிவில் கொடுக்கவேண்டும் என்றால் மடிகணணியை மறக்காதீர்கள்.........
 
விழாவில் அமெரிக்கர்கள் பேசும் போது அவர்கள் நம்மீது காட்டும் பரிவுக்கும் பாசத்திற்கும் கை தட்டல் மூலம் நன்றி சொல்ல தயங்காதீர்கள், பலமாக சொல்லுங்கள். முவா அவர்களை விழா கருத்தாக கொண்டு இருக்கிறார்கள் அனேகமாக இலக்கிய பிரியர்களுக்கு நல்ல வேட்டையாக இருக்கும்......


விழாவில் சந்திப்போம் நண்பர்களே.......... வாருங்கள்..........