Friday, September 25, 2009

எவனோ ஒருவன் - படத்திற்கு விருதுகிடைக்கவில்லையே ஞானியின் கவலை சரியானது தானா

தேசிய விருதுகள் அறிவித்ததை அடுத்து தனது விமர்சனங்களாக வைக்கும் விதமாக ஞானி அவர்கள் காஞ்சிவரம் படத்திற்கு விருது கொடுத்ததை கண்டித்ததோடு நில்லாமல் எவனோ ஒருவன் படத்திற்கு கொடுத்து இருக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தார்.


பதிவுகளில் எழுதி இப்போது வார இதழ்களுக்கு எழுதும் அளவிற்கு உயர்ந்த இவருக்கு, தேசிய விருகளுக்கு உள்ள அடிப்படை தகுதிகள் கூட தெரியவில்லையே என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.


எவனோ ஒருவன் படம் ஆங்கிலப்படத்தின் பிரதி. ஒவ்வொரு காட்சியும், கதையும் அப்படியே ஈ அடிச்சாம் பிரதியாக்க இருப்பதை மூலபடத்தை பார்த்தவர்களுக்கு தெரியும். இல்லை என்று அந்த படத்தை எடுத்த இயக்குனரும் சரி, நடித்த மாதவனும் சரி வாதாடவோ எங்கே ஆதாரம் காட்டுங்கள் என்றோ கேட்கும் நிலையில் எல்லாம் இல்லை.


எவனோ ஒருவன் தனது கடின உழைப்பில் கதை எழுதி, அதை வெற்றி திரைக்கதையாக மாற்றி வெளியிட்டால், அதை அப்படியே ஆலிவுட்டுக்கு வெகு தொலைவில் அல்லவா உள்ளோம் என்று தமிழில் மாற்றி எடுத்த உங்களது முயற்சியை வேண்டு என்றால் பாராட்டலாம் ஆனால் அதற்கு விருது எல்லாம் மிகைமிகையான ஆசைகள் ஞானி.


மற்ற விபரங்களுக்கு எனது விமர்சனத்தை பார்க்கவும்.
http://panimalar.blogspot.com/2008/03/blog-post_19.html

Tuesday, September 22, 2009

உன்னைப்போல் ஒருவன்-- இந்த படமும் விடுதலை புலிகளும்

இந்த படம் வந்ததில் இருந்து அடடா என்ன படம், ஒரு பொது மனிதனின் கோபம் என்ன அழகாக நடித்துள்ளார். என்னே திரைகதை, இசை அதிலும் அபாரம். அப்படி இப்படி என்று ஏகத்திற்கு எழுதி தள்ளுகிறார்கள் நமது வலைஞர்கள்.

இந்த படத்தின் நீதியை நாயகன் விளக்கும் காட்சி, கண்ணுக்கு முன் நடந்த கொடூரங்களும், அந்த கொடூரத்தை நிகழ்த்தியவர்கள் எந்த ஒரு குற்ற உணர்ச்சிகளும் இல்லாமல் சொகுசாக வாழ்கிறார்களே. அவர்களை யார் தான் என்னதான் செய்துவிட முடியும் என்ற கோபம். அப்படி இப்படி என்று எல்லாம் இவர்கள் எழுதுவதை பார்த்தால். என்னே ஒரு இரக்க குணம் இந்த மக்களுக்கு என்று பாராட்ட தோன்றுகிறது.

வெறும் கதையை பார்த்துவிட்டு, அய்யயோ என்று கண்ணீர் வடிக்கும் இந்த கூட்டம் நமது சகோதர்கள் கூட்டம் கூட்டமாக அன்றாடம் மடிந்து கொண்டு இருக்கும் போது. அப்படி எதுவுமே நடக்கவில்லை, புலிகள் செய்வது தீவிரவாதம், பாவம், கொடூரம் என்று எல்லாம் வந்து எங்களது பதிவில் எழுதிவிட்டு சென்றார்கள்.

இந்த படத்தில் நாயகன் செய்ததை தான் விடுதலை புலிகள் இத்தணை ஆண்டுகளாக செய்து வந்தார்கள். ஒரு சில தனி மனிதர்களது கோபம், ஆற்றாமை ஒன்று கூடி எதிர்க்கும் வலிமையாக மாற்றம் பெற்றது.

இந்தியாவில் இசுலாமிய சகோதர்களுக்கு எதிப்பு என்றால் ஆமாம் அவர்களை எல்லம் கொல்ல வேண்டும் என்று கண்களை கட்டிக்கொண்டு ஆதரவு தெரிவிப்பதும். அவர்களால் விளைந்தது மட்டும் தான் தீவிரவாதம் என்றும், மற்றவர்களால் வருவது எல்லாம் தக்காளி சாரு என்று எண்ணும் உங்கள் எண்ணத்தை என்ன என்று சொல்ல.............

எங்கே இந்த படத்தை பிரகாசு ராசை வைத்து எடுத்தால் எதிர்ப்பு கிளம்புமோ என்ற பயத்தில் கமலகாசனை வைத்து எடுத்துள்ளார்கள். மற்ற நடிகர்கள் செய்தால் அது நாட்டு துரோகம், ஆனால் கமலகாசன் செய்தால் அது கலைபடைப்பு ஆகுமே.

கர்னாடகத்தில் பசக ஆட்சியை பிடித்தாகிவிட்டது, ஆகையால் அவர்களுக்கு எல்லாம் பாடம் தேவை இல்லை, ஆனால் தமிழகமும், ஆந்திரமும் அடுத்த கட்ட தலைவர்களை தேடி அலையும் காலம் இது. இப்போது ஏற்றினால் தான் இந்த தீவிரவாதம் போதை அவர்களுக்கு தலைக்கு நேராக ஏறும் என்று கமலகாசனின் முகமூடியில் வைத்து பசக கொடுத்துள்ளது போலும்.

கே ராமில் கமலகாசன் கல்கத்தாவில் நடந்த கலவரத்தை காட்டி காசு செய்யவும், மத உணர்வுகளை தூண்டவும் நினைத்து அந்த படம் அப்படி இப்படி என்று எல்லாம் பேசப்பட்டது. ஆனால், அன்றைக்கு கதையின் தலைவனாக சொன்ன பாடம் ஏற்க தமிழக மக்கள் மறுத்துவிட்டார்கள். ஆனால் இன்றைக்கோ கிட்டத்தட்ட விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் வீர வணக்க நாளான்று விடுக்கு முறையீடுக்கு இணையாக கமலகாசன் முறையீடுகளை செய்துள்ளார்.

விடுதலை புலிகளுக்கு ஆதரவு என்று ஒரு புறம் தெரிந்தாலும், இந்தியர்களுக்குள் சண்டை மூட்டி அதன் மூலம் தெற்கில், தமிழகம்,ஆந்திரம் என்று ஆட்சியை கைகொள்ளும் கள்ள முயற்சியாகத்தான் இந்த படம் தோன்றுகிறது.

தமிழர்களுக்கு இந்த தீவிரவாத பெத்தடின் போதை அவ்வளவு எளிதில் ஏறிவிடுவது இல்லை தான், அதற்காக இப்படியா கொள்ளை கொள்ளையாக கொண்டு வந்து ஏற்றுவது...................

உன்னைப்போல் ஒருவன் , இந்து தீவிரவாதிகளின் பிரச்சாரபடம். எப்படி தடைவிதிக்காமல் விட்டார்கள் என்று தெரியவில்லை.

Thursday, September 10, 2009

முதுகெலும்பு இல்லாத சீனாவும் தன்மானம் இல்லாத பசகவும்(BJP)

அண்ணன் எப்போ போவான் திண்ணை எப்போ காலியாகும் என்று இருந்ததை போல இலங்கையில் பாக்கிட்த்தானம் தனது இராணுவ தளவாடங்களை இறக்கியதோடு மட்டும் அல்லாது இந்தியாவை குறிவைத்து தனது இராணுவ நகர்வுகளை முன்னெடுத்துக்கொண்டு வருகின்றது.

இந்த நிகழ்வுகள் நிகழ்ந்து சில தினங்களுக்குள்ளாகவே சீனா தனது விமான படையை இந்தியாவிற்குள் ஊடுருவ விட்டு இந்தியாவின் பதில் நடவடிக்கை என்ன என்று பார்த்து நின்றது. ஒன்றும் செய்யாமல் மட்டும் இல்லை, என்ன செய்வது என்று குழம்பி போய் நிற்கும் சமயத்தை பயன்படுத்திக்கொண்டு தனது இராணுவத்தையும் ஊடுருவ செய்து உலகுக்கே அறிவிக்கும் முகமாக சிவப்பு வண்ணமும் சீனா என்றும் எழுதி காட்டியது.

அதாவது அவர்களது இராணுவம் இந்திய எல்லையில் இத்தணை மயில் கணக்கில் உள்ளே நுழைந்து திரும்பியது என்று உலகுக்கு சொன்ன பிறகாவது இந்தியா ஏதாவது ஒரு எதிர் நடவடிக்கையை எடுக்கிறது என்று பார்த்து ஏமாந்து நிற்கிறது பாவம்.

உலக வல்லரசுகளில் ஒன்றாக தன்னை கூறிக்கொள்ளும் நாடு இந்த சீனா. பெரிய நாடு, உலகில் அதிக மக்களை கொண்ட நாடு. இத்தணை ஆண்டு காலமாக பொதுவுடமை கொள்கைகளை கொண்டு வளர்ந்த நாடு என்று எத்தணையோ அவர்கள் சொல்லிக்கொண்டாலும். அவர்களது மொழியில் இந்தியா ஒரு சுண்டக்காய் நாடு. அந்த நாட்டோடு நேருக்கு நேர் மோத துணிவு இல்லாமல். பாக்கிட்த்தானத்தை பணம் கொடுத்து தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதும்.

ஆள் இல்லாத எல்லையில் மூக்கை நுழைத்து பார்ப்பது திருடர்களது வேலை. பெரிய நாடு என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள் கீழ்தரமான திருடர்களை போல் நடந்துகொள்வது ஏன். உண்மையில் இவர்கள் சொல்லிக்கொள்வது போல் வலிமை இல்லாத நாடாகத்தான் சீனா இது வரையில் இருந்து வருகிறது போலும். உடலில் இருந்து துறுத்திக்கொண்டு தெரியும் எலும்புகளை மறைப்பதர்காகத்தான் அந்த சிவப்பு வண்ண பட்டாடையை அணிந்து இருக்கிறதா என்றும் எண்ணத்தோன்றுகிறது.

ஒரு சுண்டக்காய் நாடு என்று உங்களால் வருணிக்கப்பட்ட நாட்டை சென்று சண்டைக்கு இழுக்க நெஞ்சில் துணிவு இல்லை பிறகு என்ன வல்லரசு நீங்கள். இதற்கு சிங்கள நாடு போல் பிச்சை எடுத்து பிழைக்கலாம்.

முதலில் இந்தியாவின் தயாரிப்பு என்று போலி மருந்துகளை ஆப்ரிக்க நாடுகளுக்கு விற்று பார்த்தார்கள், கண்டு பிடிக்கப்பட்டு மூக்கறு பட்டு நின்றார்கள்.

பிறகு இந்தியாவின் விண்வெளி திட்டத்தை விட எங்களது நுட்பம் மேலானது என்று காட்டும் வகையில் விண்வெளியில் தனது வீரனை அனுப்பி படம் காண்பித்தார்கள். அவர்கள் காண்பித்த இந்த படத்திற்கு பதிலாக இந்திய 13 கோள்களை ஒரு கணையில் பொருத்தி விண்ணுக்கு ஏவி சீனாவிற்கு வண்ணத்தில் படம் காட்டியது. அந்த 13 கோள்களில் சந்திராயணம் கோள் செலவும் கணையின் செலவும் மற்ற 12 கோள்களை அனுப்ப கொடுத்த பணம் ஈடு கட்டியது. ஆக செலவே இல்லாமல் நாம் விண் திட்டத்தில் மற்றும் ஒரு சாதணையை படைத்து காட்டினோம்.

அதோடு மட்டும் நில்லாது 2012ல் கணைகளின் வகையில் அதி நவீன நுட்பமாக கருதும் நுட்பத்தில் 2012ல் நிலவுக்கு சந்தியாணம் - 2 செல்லும் என்றும் அறிவித்தது இந்தியா. 70 ஆயிரம் படங்களை எடுத்து நிலவில் பனிபடிவம் உள்ளது என்று சொன்னாலும் சொன்னார்கள், இந்த மானம் கெட்ட சீனத்திற்கு பொத்துக்கொண்டு வந்திருக்கும் என்று நினைக்கின்றேன் உடனே இந்த எல்லை மீரல் பிரச்சணையை துவக்கி தனக்கு விளம்பரம் தேடுகிறது.

சென்ற மாதம் இந்தியாவின் தயாரிப்பான இலகு இரக தாக்குதல் விமானங்கள் மிக்கு 21க்கு பதில் சேர்க்கப்படும் என்ற அறிவிப்பும், 2012ல் அதி மிகையொலி அதி தாக்குதல் விமானம் உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு படையில் சேர்க்கப்படும் என்ற அறிவிப்பும் சினாவின் வயிற்றில் எரிச்சலை உண்டு செய்திருக்கும் என்று நினைக்கின்றேன் அது தான் இந்த போக்கிரிதனத்தை செய்துவிட்டு கைலியை மடித்து கட்டி வாயில் புகையுடன் இன்னா என்று நிற்கிறது போலும்.

இந்த நிலையில், நாட்டின் முன்னேற்றம் மட்டுமே முக்கியம், மற்றவை எல்லாம் பிறகு தான் என்ற நோக்கில் தலைமை அமைச்சர் செயல்பட்டுக்கொண்டு இருப்பதை நன்றாக தெரிந்தும். அவருக்கும் நாட்டின் ஒருமைபாட்டிற்கும் துணையாக இருக்க வேண்டிய எதிர்கட்சியான பசக கொஞ்சம் கூட நாகூசாமல், ஒரு தேசிய கட்சி என்ற பொறுப்பு கூட இல்லாமல் இப்படி தலைமை அமைச்சரையும் அவரது அமைச்சரவையும் கேலி செய்யும் விதமாக பேசி இருப்பது அவர்களது ஈன புத்தியை காட்டுகிறது.

கார்கிலில் ஒரு அவசர நிலை தோன்றியது எல்லா கட்சிகளும் எப்படி கட்டுக்கோப்பாக ஒற்றுமையை கடைபிடித்து காட்டிய நிலை இல்லை என்றாலும் சீனாவை வன்மையாக கண்டிப்பதோடு, இது போல் செயல்களுக்கு இந்திய அரசு எடுக்கப்போகும் எதிர்வினைக்கு துணையாக நிற்போம் என்று கூறாமல், நாங்களாக இருந்து இருந்தால் இப்படி அப்படி என்று செய்தி இதழ்களால் பேசுவது என்ன அரசியல் அறிவோ தெரியவில்லை.

இனியாவது பொறுப்பாக நடப்பார்களா இந்த மானமில்லா பசக கட்சியினர்கள்.

Wednesday, September 9, 2009

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க? -- நகைப்புக்கு மட்டுமே

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?

நியாயமான ஒரு கேள்வி

ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?

நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.

நானும் விவரிக்க ஆரம்பிதேன்.

வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும்.

அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும்.

இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்.

"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க.

இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.

"சரி"

இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants....".

இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.

காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?

ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா? அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.

"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?

"MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."

"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?" – அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"

"அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்"

"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்?ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"

"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான். ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.

"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.

"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.

"CR-னா?"

"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."

அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது. "இதுக்கு அவன் ஒத்துபானா?"

"ஒத்துகிட்டு தான்ஆகணும். முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"

"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"

"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."

"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."

"அதான் கிடையாது. இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது."

"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" அப்பா குழம்பினார்.

"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறது தான் இவரு வேலை."

"பாவம்பா"

"ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."

"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"

"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."

"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி?!"

"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."

"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"

"வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க...
டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."

"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?"

"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை. புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி."

"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"

"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"

"கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"

"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."

"எப்படி?"

"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை."

இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".

"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"

"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்."

"அப்புறம்?"

"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."

"அப்புறம்?"

"அவனே பயந்து போய், "எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு" புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க."

இதுக்கு பேரு "Maintenance and Support". இந்த வேலை வருஷ கணக்கா போகும்.

"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.

"எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா."

தயாரித்து அனுப்பிய வலையுலக நண்பருக்கு நன்றி...........

காந்தியும், நேருவும் இன்றைக்கு இருந்திருந்தால் ஈழம் மலர்ந்து இருக்கும்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, சிறுபான்மையான இசுலாமியர்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று சின்னா சொல்ல. அப்படி எல்லாம் இல்லை என்று காந்தியும், நேருவும், மற்ற அரசியல் தலைவர்களும் எவ்வளவு உத்திரவாதம் கொடுத்தும் நில்லேன் என்று தனி நாடாக போகின்றோம் என்று அடம் பிடித்து நின்ற சின்னாவால் தனி நாடாக பாக்கிட்த்தானம் மலர்ந்தது.

இப்படி ஒரு பிரிவினை பிறக்கப்போகிறது என்ற பேச்சுகள் எழுந்த உடனேயே வடக்கிலே கலவரம் தலைவிரித்தாடியது. கடைசியாக சரி போய் சேருங்கள் என்று காந்தியின் தலைமையில் முடிவு எட்ட நேருவும் அதை ஏற்றுக்கொண்டு விட்டுக்கொடுத்தார்.

அந்த பிரிவினையும் ஈழம் போல் இரத்த பிரிவினையாகத்தான் இருந்தது. ஆனால் அன்றைக்கு தனி நாடு கேட்ட மக்களின் மீது இப்படி காந்தியின் தலைமையில் உள்ள அரசியலர்கள் வன்முறையை கட்டவிழ்த்துவிடவில்லை.
மாறாக அந்த பயத்தை போக்கும் விதத்திலும் நம்பிக்கையும் பிறக்கும் விதத்திலும் நடந்து காட்டியும், மேலும் நடந்து காட்டவும் முற்பட்டார்கள்.

ஒன்றாகவே இருந்து பிரச்சனைகளை கொண்டு நகருவதற்கு பதில் பிரிந்து நிம்மதியாக இருக்கலாம் என்ற முன்னோசனை அவர்களுக்கு இருந்தது.

மேலும் நம்பிக்கை இல்லாத இடத்தில் இனியும் நம்பகமாக நடந்து காட்டினாலும் அவர்கள் நம்புவதற்கு இல்லை என்று தெளிவாக பாக்கிட்த்தானத்தை தனியாக செல்ல அனுமதித்தார்கள் அந்த பழுத்த அனுபவம் உள்ள அரசியலர்கள்.

ஆனால் இன்றைக்கோ ஈழம் மலர்ந்தால் இந்தியாவுக்கு தீங்கு என்று எவனோ சொன்ன ஆரூடத்தை கையில் வைத்துக்கொண்டு வரிசையாக அரிதாரம் பூசி கதகளி ஆடி நிற்கிறது அதே பேராயத்தில் வந்த அரசியலர்கள்.

அன்றைக்கு நேருவுக்கும், காந்திக்கும் இந்தியாமீது கொண்ட நம்பிக்கையை இன்றைய அரசியலர்கள் கொள்ள பயம் கொள்வதேன் என்று விளக்குவார்களா.

இலங்கையில் அவர்களது மண்ணில் விளைந்த பிரிவினை. அதை சிங்களர்களாவே விதைத்தார்கள், அவர்களாகவே தான் அறுவடை செய்யவேண்டும். இதில் இந்தியாவுக்கு என்ன பங்கு இருக்க முடியும். தனது மூக்கை ஏன் இப்படி தானா கொண்டு நுழைக்கவேண்டும்.

பிறகு மூக்கறுபட்ட சூர்ப்பனகை போல் ஓலமிட்டு இப்படி ஒட்டு மொத்த தமிழர்களையும் அழித்து, மூக்கறு பட்டதிற்கு பழி தீர்த்துக்கொண்டோம் என்று பெருமையாக ஏன் சொல்லவேண்டும்.

மூக்கை நுழைத்தது இந்தியாவின் தவறு, அப்படி நுழைத்தற்கு தான் மூக்கறு பட்டீர்கள், பிறகு ஏன் குய்யோ முறையோ என்று ஏன் கதர வேண்டும்.

ஒரு வேளை காந்தியும், நேருவும் இன்றைக்கு இந்திய அரசியலை கட்டுப்படுத்தும் நிலையில் இருந்திருந்தால், ஒன்றாக இருக்க முடியாவிட்டால் தனியாக இருந்துவிட்டு போங்கள் என்று தான் தைரியமாக முடிவு எடுத்து வாழ்த்தி அனுப்பி இருப்பார்கள். இப்படி முதுகில் குத்தும் செயல்கள் எல்லாம் செய்திருக்க மாட்டார்கள் அந்த மாவீரர்கள்.

ஏன் இப்போது சீனா வடக்கில் தனது இரணுவத்தை உள்ளே நுழைத்து பொப்பொபே ஆடி காட்டுகிறதே போய் காட்டவேண்டியது தானே உங்கள் இந்திய வீரத்தையும் சூரத்தையும். எவனாவது இளிச்சவாயன் கிடைத்தால் போட்டு அடியோ அடி என்று அடிப்பார்கள். அடி விழும் என்று இருந்தால் எல்லை பாதுகாப்பாகத்தான் இருக்கிறது, இராணுவம் வந்தால் என்ன, விமான படை வந்தால் என்ன. எல்லை நன்றாக பாதுகாப்பாக இருக்கிறது என்று அறிக்கை விடுவார்கள் இந்த மானம் கெட்ட பேராய அரசியலர்கள்.

Monday, September 7, 2009

அணுஆயுத நாடாக போகும் இலங்கை -- இந்தியா என்ன செய்ய போகிறது.

பாக்கிட்த்தானம் அதிக அளவில் அணு ஆயுதங்களை வாங்கி குவித்து வருகின்றது என்ற செய்தியை மீண்டும் மீண்டும் அமெரிக்கா சொல்லிக்கொண்டே வருகிறது.

அது மட்டும் அல்லாது இன்றைய நாளேடுகளில் வந்திருக்கும் மற்றும் இரு செய்தி, முசாராப்பு தீவிர அரசியலில் குதிக்கிறார் என்ற செய்தி.

இந்த இரண்டு செய்திகளும் எவ்வளவு நம்பகத்தன்மை வாய்ந்தது என்று முதலில் பார்ப்போம். கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் இதே அமெரிக்க வெளியிட்ட அறிக்கையில் பாக்கிட்தானம் சுவாட்டு பள்ளதாக்கில் நடக்கும் வன்முறைகளை கையாள தெரியாமல் பாக்கிட்த்தானம் திணருவதாகவும். அதற்கு அமெரிக்கா சென்று தான் பொருள் மற்றும் இராணுவ உதவிகளையும் கொடுத்து பாக்கிட்த்தானத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் செய்திகளை வெளியிட்டு. அமெரிக்காவின் படைகளையும், பொருட்களையும் அனுப்பியது.

இன்றைக்கு அமெரிக்க சொல்வது போல் அணுகுண்டுகளை விளை கொடுத்து வாங்கும் வசதியில் பாக்கிட்த்தானம் இருக்கும் பட்சத்தில் இவ்வளவு பொருளை கொடுக்க அமெரிக்க பாராளுமன்றம் ஒத்துக்கொண்டது எப்படி என்று அமெரிக்க தெரியபடுத்துமா.

முசாரப்பு தீவிர அரசியலில் இறங்குகிறார் என்று சொன்னால், அந்த செய்தி யாருக்கு சொல்லும் செய்தியாக இருக்கும். உலகத்திலே பாக்கிட்த்தானத்தினால் பாதிக்கப்பட்ட ஒரே நாடான இந்தியாவுக்கு தான் இந்த செய்தி அது. அதுவும் எப்படி பட்ட நிலையில் இந்த செய்தியை வருகின்றது. அதிக அளவு அணுகுண்டுகளை பாக்கிட்தானம் குவித்துவைத்துள்ள இந்த நிலையில் இந்த செய்தி வருவது. இந்தியாவுக்கு கார்கிலை நினைவூட்டும் செயலாக இந்த செய்தியை இந்தியா எடுத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் பரப்ப பட்ட செய்தியாகத்தான் இது இருக்கும்.

இதோடு நிற்காமல் அழிக்கப்பட்ட ஈழ பூமியில் இதே பாக்கிட்த்தானம், தனது இராணுவ தளத்தை அமைத்து வருவதற்கு முன்னோடியாக இராணுவ பயிற்சி என்ற பெயரில் அங்கே அதிக அளவில் முகாம்மிட்டு இருப்பதை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்த நிலையில், பாக்கிட்த்தானம் அணு ஆயுதங்களை தயார்படுத்துகிறது என்றால். அது இரசியா பனிபோர் காலத்தில் கியூபாவில் கொண்டு வந்து நிறுத்தி வைத்துதிருந்த 50 ஏவுகணைகளை நினைவு கூறும் நிகழ்வாக இருக்கிறது.

பாக்கிட்த்தானத்திடம் இருக்கும் ஏவுகணைகளின் இலட்சணம் இந்தியாவுக்கு நன்றாக தெரியும். அப்படி எண்ணி இந்தியா திமிராக இருக்கும் என்ற எண்ணத்தில், இலங்கையில் கொண்டு வந்து தனது அணு ஆயுதங்களை தென்னிந்தியாவை தாக்கும் திட்டமாக பாக்கிட்த்தானம் இந்த முன்னகர்வை எடுத்து இருப்பது தெரிகின்றது. இதற்கு இந்திய எந்த கோணத்தில் தனது பதிலடியை தயார்படுத்திகொள்கிறது என்று உலகம் கவனித்துகொண்டு இருகிறது.

2012ல் சந்திராயணம் 2 என்ற திட்டபணிகளை நேற்று தான் அண்ணாதுறை தெரிவித்தார். 480 கோடி உரூபாய்களில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்றும். சந்திராயணம்-1 70 ஆயிரம் படங்களை எடுத்து அனுப்பியதோடு மட்டும் அல்லாது. தனது துணைகோளை அமெரிக்க துணை கோளோடு இணைத்து பணிபுரியும் நடவடிக்கைகளும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது என்று அறிவித்த கையோடு இந்த அறிவிப்புகள் வெளிவருகின்றது என்றால். இந்த செய்திகளின் நம்பிக்கை தன்மை எப்படி இருக்கும் என்று நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.

பார்ப்பதற்கு தான் அமெரிக்க நல்லவனாக இருப்பான் போலும். வளர்ந்துவரும் நாடுகளில் ஒன்று முன்னேற்றம் கொள்ளும் போது அத முன்னேற்றத்தை தடுப்பதற்காக என்ன எல்லாம் செய்யமுடியுமோ அவ்வளவும் செய்யும் போலும்.

Friday, September 4, 2009

சேஞ்சுலிங்கு(Changeling) –திரைவிமர்சனம்


2008ல் வந்த படம் இது, ஆனால் கதையின் காலம் 1928. படம் துவக்க காட்சியில் இருந்து பிரம்மிப்பு தான். 1928ல் உள்ள தொலை பேசி இணைப்பகம், இலாசு ஏஞ்சலசு நகரம், நடை, உடை, தோற்றம் என்று கிளின்டு ஈசுட்டுஉட்டு அசத்து அசத்து என்று அசத்துகிறார்.



இது வரையில் வான்டட்(Wanted) படம் வரையில் பார்த்துவந்த வீராங்கனை நடிகை ஏஞ்சலீன சோலி 1928ல் உள்ள பெண்மணிக்கே உள்ள பதட்டம், பொருமை, அடக்கம் என்ற அத்தனையும் அழகாக அவரது முகதிலேயே கொண்டுவந்து காட்டுகிறார்.



படத்தில் அவ்வப்போது காட்டும் இடிராம்(Tram) வண்டிகளும், சீருந்து(Car) வண்டிகள், புகைவண்டி காட்சியின் அந்த காலத்தோடு நம்மை பார்க்க வைக்கும் படம். இவைகள் எல்லாம் பின் இணைப்பு வேலைகளாக தான் இருக்க வேண்டும் அனேகமாக அரங்கமைத்து படமாக்கப்பட்டதாக தெரியவில்லை.



1928ல் அமெரிக்க பெண்மணிகள் கூட இந்திய பெண்மணிகள் போல் பேச்சும், செயலும் சுதந்திரம் கொடுக்கப்படாமல் அடக்கிவைக்கப்பட்டு இருந்தார்கள் என்று அழகாக படம் பிடித்து காட்டுகிறார்கள்.



அடக்கமாக அழுவதும், எதிர்த்து பேசவே பயப்படும் பாத்திரமாக ஏஞ்சலீனா, அவரை மிரட்டியே காரியம் சாத்திக்கும் காவலர்கள் என்று படம் சூடு பிடிக்கின்றது. படத்தின் அந்த பகீர்காட்சி இதோ.



இந்த காட்சியில் துவங்கும் முடிச்சு கதையின் முடிவுவரை தொடர்வது கதையிலும், திரைகதையிலும் அந்த குழுவுக்கு உள்ள தேர்தியை காட்டுகிறது.

காவல்துறையே ஆனாலும் தவறு என்றால் தவறு தான் என்று கவல்துறை தலைவரையும், அந்த மிரட்டல் பேர்வழியையும் நீதிமன்றம் வேலை நீக்கம் செய்யும் போது ஏஞ்சலீனா விடுக்கும் அந்த மெல்லிய புன்னகை அருமையான நடிப்பு.



படம் பார்க்காதவர்களின் சுவாரசியம் கெட்டுவிடும் என்ற காரணத்தால் சுருக்கமாக கதை இதோ.



ஏஞ்சலீனாவின் சிறிய வயது மகன் திடீர் என காணாமல் போகின்றான். எங்கே என்று தேடி அலைகிறாள் அந்த அபலை தாய். திடீர் என்று ஒரு நாள் காவலர்கள் பிள்ளையை தேடி கண்டுபிடித்து விட்டதாக ஒரு பையனை ஏஞ்சலீனாவிடம் தினித்துவிட்டு செல்கிறார்கள்.

இது எனது மகன் இல்லை என்று பயந்த பெண்ணாக அவர் காவலர்களுடன் மெல்லிய வாதம் புரிய, இது தான் உனது மகன் மற்றும் ஒரு முறை இல்லை என்று வாதிட்டால் விளைவு வேறு மாதிரியாக இருக்கும் என்று மிரட்டபடுகிறாள் ஏஞ்சலீனா.



மகனின் அங்க அடையாளங்களையும், மற்றும் பள்ளி ஆசிரியை, பல் மருத்துவர்களது துணையுடன் செய்தி இதழ்களுக்கு இது எனது மகன் இல்லை என்று அறிவிக்க. காவல்துறை ஏஞ்சலீனாவை பைதியகாரி என்று பட்டம் கட்டி மன நல மருத்துமனையில் அடைகிறார்கள். அங்கே வைத்து இது தான் எனது மகன் என்று எழுதிவாங்க முயற்சி எடுகிறது காவல்துறை.



நல்ல மனம் கொண்ட சிலரால் ஏஞ்சலீனா மீட்கப்பட்டு, காவல்துறையின் மேல் வழக்கு தொடுக்கிறார்கள் அவர்கள். இந்த முறை அந்த காவல்துறையின் அடக்குமுறைகளுக்கு கைகூலிகளாக வேலை செய்யும் அனைவரையும் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கிறது நீதிமன்றம்.

ஒரு கட்டத்தில் படம் இவ்வளவு தான் என்று நினைக்கும் தருவாயில், கிளின்டு ஈசுடுஉட்டு காணாமல் போன பையனை மறந்துவிட்டீர்களே என்று கதை தொடருகின்றது. தொடர்ந்து எழுதினால் கதையின் முடிச்சுகள் வெளிப்படும் என்று கதையை இதோடு நிறுத்திகொள்கின்றேன்.



இந்த கதை தமிழில் வருவதற்கு நிறைய வாய்புகள் உண்டு, தவிர தமிழில் இப்படி பெண் வாழ்கையை தொலைத்த கதைகளை எடுத்தால் நன்றாகவும் ஓடும். என்ன இந்த அளவிற்கு கால நினைவுகளோடு இல்லை என்றாலும், இரு கிராமத்திலோ அல்லது நகரத்து வாழ்க்கையாக அருமையாக எடுக்க உகந்த திரைகதை இந்த திரைகதை. எதிர்பார்ப்போம் தமிழில் விரைவில்.

Thursday, September 3, 2009

சிதம்பரமும்,மனமோகன்சிங்கும்,பதவிவிலக வேண்டும், குடியரசு தலைவர் மத்திய ஆட்சியை கலைக்கவேண்டும்

நாட்டின் பாதுகாப்பு கெட்டு போகிவிட்டது, தீவிரவாதமும், பயங்கரவாதமும் தலைவிரித்து ஆடுகிறது. மக்கள் ஒருவருக்கும் பாதுகாப்பு இல்லை அதனால்......

ஆந்திர முதல்வர் காணாமல் போனதை அடுத்து செயலலிதா இப்படி ஒரு அறிக்கையையும், தமிழகத்து அனைத்து ஊர்களிலும் சாலை மறியலும், போராட்டம், உண்ணா நோம்பு என்று அறிவிப்பார் என்று பார்த்து பார்த்து ஏமாந்தது தான் மிச்சம்.

அந்திராவில் இந்த கண்ணாமூச்சு நடந்து இருந்தாலும் ப.சிதம்பரத்தை பதவி விலக கோருவதில் செயலலிதாவுக்கு ஒரு தனிபட்ட ஆர்வம்.

அதே போல் தான் மனமோகன்சிங்கும், எது எடுத்தாலும் இவரும் பதவி விலக வேண்டும். ஆனால் தொடர்ந்த 4ஆம் முறையாக அதிமுக மேற்கொள்ளும் அத்தணை தேர்தலிலும் தோற்றுக்கொண்டு வருகிறது இந்த பாட்டி மட்டும் பதவி விலகல் என்ற வார்த்தையை கூட சொல்ல அஞ்சுகிறார்.

ஒரு வேளை இப்படி ஏது நாடகம் ஆடினால், கிடைத்த வாய்பை செவ்வனே பயன்படுத்தி மக்கள் கட்சியையும் ஆட்சியையும் பிடித்துவிடுவார்கள் என்ற அச்சம் அவருக்கு.

குறைந்தது அடுத்த தேர்தல் வரும் வரையில் படுக்கையிலேயே ஓய்வு எடுக்கும் படி மருத்துவர்கள் ஆலோசனை செய்து இருப்பார்கள் போலும். அது தான் பாட்டியை எங்கேயும் கானோம்.

Wednesday, September 2, 2009

மெய்ப்பொருள்- திரைவிமர்சனம்

படம் மொத்தமும் ஒரே ஒரு வரி கதை, அதுவும் கதைகளில் வரும் திருப்பங்கள் என்று எதுவும் இல்லாமல் இருப்பது ஏமாற்றமே.

படத்தின் மொத்த கதையும் இது தான், தற்செயலாக ஒரு குழந்தை கடத்தலை தடுக்கிறாள் ஒரு பெண். அந்த கடத்தல் கும்பலால் பழிவாங்கப்படுகிறார்கள்.

இப்படி ஒரு படத்தை எடுக்கவேண்டும் என்று முடிவுகட்டிய பிறகு கதை தான் இல்லை, அடுத்தது மற்ற பக்கங்களிலாவது கவனம் செலுத்தி இருக்கலாம்.

படத்தின் ஓரளிற்கு நிறையாக இருப்பது படபிடிப்பும், பட கோர்வையும் மட்டுமே. அதுவும் படபிடிப்பு முகத்தை வெகு அருகில் காட்டும் போது, கருவிக்கும் பொருளுக்கும் குறைந்தது இந்த அளவு இடைவெளியாது இருக்க வேண்டும் என்று இருக்கிறது. அதை கூட உதாசினப்படுத்தி எடுத்து இருப்பதை பார்க்க முடிகின்றது.

உதாரணமாக பாலாவை வெகு அருகில் காட்டும் காட்சிகளில் அவரி முகத்தை விட மூக்கு பெரிதாக தெரிவதும். பட கருவியின் வண்ண சமன் சரி செய்யாமல் எடுத்த காட்சிகளில் நாயகியின் பூச்சுகளை வெள்ளை அடித்ததை போலவும், உதட்டு சாயங்கள் அப்படியே அப்பட்டமாக தெரிவதும் நன்றாக தெரிகின்றது. அனேகமாக மிகையொளி விளக்கே இல்லாமல் இருக்கும் வெளிச்சத்தை கொண்டே படமாக்கி இருக்கிறார்கள் போலும்.

மொத்தமே 6 பாத்திரங்கள் மட்டுமே என்று முடிவான பிறகு ஓரளவிற்காவது இயல்பாக நடிக்க சொல்லிக்கொடுத்து எடுத்து இருக்கலாம். ஆனால் நாயகி முகம் எல்லாம் கிழிந்து கிடக்கும் காட்சியிலும் கூட கண்கள் பனிக்காமல் செயற்கையாக வசனம் பேசுவது போன்ற பல செயற்கை தனம் நிறைய வருகின்றது.

இந்த படத்தை இறுதிவரையில் இருந்து பார்ப்பது கடினமே அந்த அளவிற்கு திரைகதையில் ஓட்டைகள். அது மட்டும் இல்லாது மருத்துவராக வரும் பாலா நெச்சொலியை கேட்ட பின்பும் அந்த கருவியை காதுகளைவிட்டு கழட்டாமலேயே வசனம் பேசுவது எல்லாம் மிகை அதிகம்.

படத்தின் ஒரே ஆருதலான செய்தி படத்தில் தம்பதியர்களது வாழ்க்கையை அமெரிக்க சூழலில் காட்டும் விதமாக அமைத்த காட்சிகளில் மிகை படுத்தாமல் மிகவும் இயல்பாக இருந்த ஒன்றே ஆருதல்.

இந்த நட்டி குமார் ஞான இராசசேகரின் மகன் என்று சொல்லிக்கொள்கிறார்கள். மோக முள் எடுத்த அவர் எங்கே இந்த படம் எங்கே மலைப்பாக இருக்கிறது.

அப்பா பெயரை காப்பாறுங்கள் நட்டி குமார்......

Tuesday, September 1, 2009

இலங்கையில் இனி என்ன நடக்கும்

ஈழத்தின் தேவை இந்தியாவின் தேவையாக இருந்த வரையில், இந்தியாவின் தயவு இலங்கைக்கு இருந்தது. ஆனால் இன்றோ இந்தியாவின் தயவு எள்ளவும் இலங்கைக்கு தேவை இல்லவே இல்லை. அதன் அடிப்படையில் தான் இந்தியாவை அவமான படுத்தும் வசனங்களும், நேர் மாறானா பதிலுரைகளையும் செவ்வியிலும், செய்தியிலும் இலங்கை பூடகமாகம் கூட இல்லாமல் அப்பட்டமாக தெரிவித்து வருகின்றது.

இந்தியா முன்டுகொடுக்க இந்த போரில் ஒரு வெற்றியை ஈட்டிவிட்ட முனைப்பில், இந்தியாவுகே குழிபறிக்கும் விதத்திலும் இலங்கை போர் முடிந்த கையோடு நடந்து காட்டவும் தயங்கவில்லை.

20 மையில் தொலைவில் அமைந்துள்ள தீவில் இருந்துகொண்டு இந்தியாவுக்கு குடைச்சல் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்கா முயன்ற காலத்தில் இருந்து, இந்தியாவின் பாதுகாப்பு கேள்வி குறியாகிவிடக்கூடாது என்ற காரணத்தால் மட்டுமே மனதில் கொண்டு இலங்கையில் உள்ள ஈழ பிரச்சணையை இந்தியா கையாண்டது.

இந்தியாவின் தேவைகள் யாவும் ஒரு அளவுக்கு பூர்த்தியானதும் கைகழுவும் வேலையை இந்திய இராணுவமும், அரசாங்கமும் முனைப்புடன் செயலாற்றும் போது தான். அதை எதிர்பார்த்த வண்ணமாக தான் நாங்களும் இருக்கின்றோம் என்று புலிகள் பதிலடி கொடுத்து இந்திய அமைதி படையை ஒரு பெருத்த அவமானத்துடன் நாடு திரும்ப வைத்தார்கள்.

அன்றைக்கு வாங்கிய அடியை வாயை பொத்திக்கொண்டு இந்திய இராணுவம் வெளியே தெரியாமல் அழுததின் வலியும், வஞ்சமும் இந்த போரில் இந்திய இராணுவமும் இந்திய அரசாங்கமும் தீர்த்துக்கொண்டது.

சரி புலிகளை வெற்றிக்கொண்டாகிவிட்டது, பிறகு என்ன என்று வெற்று சிந்தனையில் இந்திய இராணுவம் சிந்திக்க எண்ணும் தருவாயில். பாக்கிட்தானத்து இராணுவத்திற்கு சிங்கள இராணுவம் பயிற்சி என்று போர் முடிந்த சில தினங்களிலேயே இலங்கை அறிவிப்பது. அதற்கு தகுந்தார் போல் சீன இராணுவ வானூர்திகள் இந்திய எல்லையில் நுழைவதும் ஒன்றும் தற்செயலான செயலாக் தெரியவில்லையே.

எங்களது மக்களுக்கு உணவு பொதிகளை வினியோகிக்கத்தான் என்று சீனா வாதிட்டாலும், ஓராண்டுக்கு மேல் காலாவதியான உணவு பொதிகளை வந்து வீச வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டால் சீனா என்ன எனது மக்கள் எலிக்கொடுக்கும் உணவே ஆனாலும் உண்பார்கள் என்றா சொல்ல போகிறது.

அதுவும் எப்போர் பட்ட வானூர்திகளை அனுப்பினார்கள் என்றால் உலக தரத்தில் 4காவது வலிய வானூர்திகளை எந்தவித முன்னறிவிப்புகளும் இல்லாமலும் இந்திய பகுதியில், தன்னுடைய பகுதி என்று சொல்லிக்கொண்டு முரட்டு தனமாக நுழைவது ஒன்றும் சாதாரணமாக காரியமாக தெரியவில்லை.

ஆக மொத்தத்தில் இந்தியா புலிகளை பழி வாங்குவதாக எண்ணிக்கொண்டு தனது சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டதாக தான் தெரிகின்றது. இந்த இக்கட்டான சூழ் நிலையை ஆள வேண்டும் என்றால், இலங்கையின் இராணுவத்தை இந்தியா கலைத்து இந்தியாவின் ஆதிக்கத்தில் இலங்கையை கொண்டு வரவேண்டிய கட்டாயம் பிறக்கின்றது.

அப்படி முன்னெச்சரிக்கையாக செய்யாமல் விடுங்கால், சீனாவுடன் நேருக்கு நேர் இந்தியா மோத வேண்டி வரும். இலங்கையா, சீனமா என்று பார்த்தால் இலகுவான இலக்கு இலங்கையாத்தான் இருக்கும். ஒரு சிறிய படையான புலிகளை கொண்டு அடக்கி வைத்தது போக இவ்வளவு பெரிய பிரச்சணைக்கு உரிய செயலில் இந்தியா தன்னை ஆட்படுத்தி கொண்டது அதன் தொலை நோக்கு பார்வையின்மையை காட்டுகிறது.

என்ன நடகின்றது என்று பொருத்து இருந்து பார்ப்போம்............