Tuesday, October 30, 2007

21 கரும்புலிகளை பலிகொடுத்தது சரியா, அதனால் புலிகள் அப்படி என்ன தான் சாதித்தார்கள்???????

ஒவ்வொரு முறையும் புலிகளின் தாக்குதல் நடக்கும் போதும் அனேகமாக காணும் விடயங்கள் 2 விதப்பாக கொள்ளலாம். முதலாவது புலிகளின் செயல்களை சரி என்று கருதி அவர்களுக்கு ஆதரவாக வரும் பதிவுகள், விமர்சனங்கள். மற்றொன்று அவர்ளுக்கு எதிர்ப்பாக ஒலிக்கும் குரல். ஆதரவாக ஒலிக்கும் குரலில் தமிழர்களை சம்மாக நடத்தவேண்டும் என்று நினைப்பவர்களும், பாதிக்கப்பட்டவர்களும் அடங்கும். இதில் பாதிக்கப்பட்டோரது குரல் நாள் போக்கில் அடங்கி வருவது வருத்ததிற்கு உரிய செயல் என்றாலும், இவ்வளவு நீண்டகாலம் அவர்களது தனிப்பட்ட வலியும், இழப்பும் ஆராமல் அப்படியே இருப்பது கடினம். காலம் அனைத்தையும் ஆற்றும் வல்லமை படைத்தது அதனால் தான் எதையும் தள்ளி போடாதே என்று பெரியோர்கள் உரைப்பர்.

புலிகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களில் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டோரது உணர்வுகளை எளிதாக புரிந்துகொள்ள முடியும். என்ன தான் தேசம் என்று இருந்தாலும் தன வீட்டில் ஒரு இழப்பு என்றால் அது யாராலும் தாங்க முடியாத ஒன்று தான். அந்த உயிரழப்பை எதைக்காட்டியும் நீதி படுத்த முடியவே முடியாது. saving private Ryan என்ற ஆங்கில படத்தின் கரு இந்த ஒரு விடயமே, படத்தை பார்த்தோருக்கு தெரியும். இப்படி பாதிக்க பட்டோரது பின்னூடங்களை காணும் போது, அந்த கோப வார்த்தைகளை படிக்கும் போது, வருத்தம் நம்மையும் தாண்டி வெளியே தெரிவதை உணர்ந்து இருப்போம். அவர்களது உணர்வுகளை மதித்து அவர்களுக்கு எதிராக வார்த்தைகளை வைக்காமல் இருக்கும் நல்ல உள்ளங்களை பாராட்டுவதோடு, விமர்சனம் வைப்பவர்களுக்கு ஒரு வேண்டு கோளையும் விடுக்கிறேன். தயவு செய்து நொந்துவர்களை மேலும் நோக அடிக்காதீர்கள், அவர்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுங்கள். என்ன பேசினாலும் அவர்களது இழப்பை எது கொண்டும் யாராலும் ஈடு கட்டவே முடியாது. ஆகவே உங்களது வார்த்தையும் சொல்லாடல்களை மட்டுப்படுத்துங்கள் என்று தாழ்மையோடு வேண்டி விழைகின்றேன்.

இவர்கள் அல்லாது எதிர்ப்பவர்களை தான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. உயிரின் விலையை பற்றியும், பொது மக்கள் பற்றியும், வாழ போன நாடு என்றும், தமிழனின் கொழுப்பு என்றும் கூட தகாத வார்த்தைகளில், அரசியலாக, பத்திரிக்கையாக, தலையங்கமாக, என்று ஏகபட்ட சார்புகளாக எதிர்ப்பவர்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

முதலில் அங்கே நடக்கும் போராட்டம் ஒரு இன அழிப்புக்கு எதிராக நடக்கும் ஒரு போராட்டம். இன அழிப்பு இல்லவே இல்லை என்று யாராலும் ஆதார பூர்வமாக மறுக்கவோ மறைக்கவோ முடியாது. எதிர்த்து கேள்வி கேட்டார்கள் என்ற ஒரே காரணத்தை கொண்டு, என்னென்ன விதயமாம தாக்குதல் தொடுக்க முடியுமோ அத்தனை விதமாக தாக்குதல் தொடுத்து, இதற்கு கொன்று போட்டாலும் பரவாயில்லை என்ற அளவிற்கு ஆளாக்கி எள்ளி நகையாடும் மன நோயாளி நாடாக திகழும் நாட்டின் போக்கை பற்றிய விமர்சனம் இல்லாமல் புலிகள் 21 உயிர்களை பலியிட்டு விட்டார்கள் என்று ஒப்பாரி வைப்பதை பார்க்கும் போது ஆடு நனையுதேன்னு என்ற பழமொழி நினைவில் வர தவறுவதில்லை.

இவர்களின் நோக்கம் என்னவாக இருக்கும், புலிகள் இறக்கிறார்கள் என்ற கவலையா, அல்லது என்ன தான் போராட்டம் என்றாலும் உயிரை குடிக்கும் போராட்டமாக இருக்க கூடாது என்ற கொல்லாமையா, அல்லது இதற்கு அரசியல் தீர்வு காண்பது தான் அவசியமே தவிர ஆயுதப்போரட்டம் கூடாது என்றா, அல்லது என்ன தான் அடி வாங்கினாலும் என்னென்ன இன்னல்கள்(விளக்க விரும்பவில்லை) வந்தாலும் அனைத்தையும் விதி என்று மட்டுமே இருக்கவேண்டுமே தவிர எதிர்க்கவே கூடாது என்றா........ என்ன என்று எனக்கு புரியவே.

புலிகளின் நடவடிக்கைகளை எதிர்ப்பதின் பொருள் என்னவாக இருக்கும், இன அழிப்பை வரவேற்கிறோம் என்று மட்டுமே பொருளா இருக்க முடியுமே தவிற வேறு என்னவாக இருக்க முடியும். நமது வீட்டில் இப்படி ஒரு நிலைமை இருந்தால் நாம் என்ன செய்வோம், அடிங்கப்பா அடிங்க நல்லா அடிங்க என்று ஒருவராலும் சொல்ல முடியாது, இது தான் உண்மை.

இப்படி இருக்க எதிர்க காரணம் என்னவாகத்தான் இருக்கும், புலிகளின் நடவடிக்கைகள் மக்களாட்சி முறைக்கு எதிரானது அதனால் எதிர்கிறோம் என்று சொல்லலாம். உங்களது வாதம் சரி என்று கொண்டாலும், இன அழிப்பு நடவடிக்கை மட்டும் எப்படி ஒரு மக்களாட்சி முறையாகும். புலிகளின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு பதில், ஐ நா விற்கோ அல்லது சர்வதேச சமூகத்திற்கோ முறையீடோ அனுப்பலாமே.

தனி மனிதனின் குரல் இவைகளிடம் எடுபடுவது சாத்தியம் இல்லைதான், ஆனால் பத்திரிக்கையாலும், அரசாலும் முடியும். பத்திரிக்கைகள் புலிகளுக்கு ஆதரவாக எழுதவேண்டும் என்று கூட இல்லை, புலிகளின் நடவடிக்கைகளை அவர்களது உயிர் தியாகங்களை குறைத்து எழுதாமல் இருக்கலாமே. புலிகளுக்கு 21 உயிர் எவ்வளவு பெரிய இழப்பு என்று இராணுவத்தினரை கேளுங்கள் தெரியும். ஒரு படையில் இருக்கும் அங்கத்தினர் எவ்வளவு முக்கியம் என்று அவர்களால் மட்டுமே சரியா அவதானிக்க முடியும்...

இந்த ஒரு தாக்குதலால் என்ன மாற்றம் விளைந்துவிட போகிறது என்று கேட்பது காதில் விழுகிறது. இங்கே கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும், தன்னிடம் மிகையொலு வான் கலங்கள் இருக்கிறது. தரமான ஒரு வான் படை இருக்கிறது என்ற ஒரு காரணத்தை கொண்டு நினைத்த இடங்கள் எல்லாம் மானாவாரியாக குண்டுகள் கொண்டு அழித்து வந்தார்களே எண்ணிகை இல்லாமல். உதாரணமாக சென்சோலை மருத்துவமனை தாக்குதல் எடுத்துக்கொள்வோம். தொடர்ச்சியாக எத்தனை தாக்குதல்கள், இராணுவம் உள்ளே செல்ல பயப்படுகிறது என்றால் உடனே கிபீர் பாயும் அங்கே.

ஒவ்வோரு முறை வான் தாக்குதல் நடக்கும் போதும் மனதில் தோன்றுவது இது ஒன்று தான், இவ்வளவு நடக்கிறதே புலிகள் ஏன் எதுவும் செய்வதில்லை. புலிகளுக்கு மட்டும் இவர்களுக்கு இருக்கும் அதே அளவில் ஆட்கள் எண்ணிக்கை இருந்தால் உடனுக்கு உடன் பதில் கிடைத்து இருக்கும். ஆனால் அவர்களிடம் இருக்கும் ஆயுதமோ, ஆட்களோ பார்த்து பார்த்து செய்ய வேண்டிய நிலைமையில் இருக்கிறார்கள். இத்தனை வான் தாக்குதலுக்கும் அப்பால் எந்த ஒரு சர்வதேசமும் அழுத்தங்களை கொடுக்காமல் சிங்கள படைக்கு ஆயுதங்களையும், நவீன இரக வேவு உபகரணங்களையும் வழங்கு வதையும் தான் மும்முரமாக செய்கிறதே அன்றி பேஸ்சிக்கு அழை என்று சொல்லும் இடத்தில் எந்த நாடும் இல்லை இந்தியா உட்பட.

இந்த நிலைமையில், சிங்கள இராணுவத்தின் நடவடிக்கைகளை புலிகள் எப்படி கட்டுகுள் கொண்டுவர முடியும். சமர் ஒரு முனையில், மற்றும் ஒரு முனையில் கிழக்கு வந்தாச்சு இனி வடக்கு மட்டும் தான் அதுவும் ஒரு மாதத்தில் வந்துவிடும். மனித உரிமை மீரல் எங்கேயும் இல்லை, அகதிகளாக வருபருக்கு பாலும் தேனும் ஆராக ஓடும் இடத்தில் தங்க வைத்து மூவேளையும் உணவு வழங்குவதே தொழில் என்று நாள் தோரும் உலகில் எத்தனை ஊடகங்கள் உண்டோ அத்தனையிலும் எழுதி தீர்கிறார்கள்.

ஐ நாவிலோ அல்லது எந்த ஒரு சர்வ தேச சமூக அமர்வாக இருந்தாலும் புலிகளின் சார்பில் கலந்துகொள்ளவோ எடுத்துரைக்கவோ எந்த ஒரு வாய்ப்பும் இல்லாத ஒருதலை பட்சமாக சிங்கள அரசு அரசியல் நகர்வுகளை எதிர்கொள்வதும். இப்படி புளுகுகிறார்களே என்று புலிகளின் இணையமும், வானொலியும், தொலைகாட்சியும் கோபம் கலந்த நகைப்பாக சொன்னாலும், அவர்களது நிலையை விளக்க அவர்களுக்கு வாய்ப்பு மறுப்பதேன்.

எங்கு எல்லாம் இராணுவ மோதல்கள் நடக்கிறதோ அங்கே எல்லாம் ஐ நா வின் இராணுவ குழு கண்கானிப்பது இருக்கும். இங்கே இலங்கையில் இருக்கும் குழுவுக்கு கள நிலைமைகள் புரியாமல் இருப்பது ஏனோ....அல்லது அப்படி அவர்கள் அனுப்பும் அறிக்கைகள் எங்கே மாற்றபடுகிறது. யார் இதுக்கொல்லாம் பொம்மலாட்ட கலைஞர்......

அடிக்கிறான் காப்பாத்து என்று சொன்னால் முடிந்தால் உதவி செய்ய வேண்டும். முடியவில்லையா அனுதாபமாது பட வேண்டும். அதை விடுத்து தானும் சேர்ந்து கொண்டு அடிப்பது, தூற்றுவது, இன்னமும் இந்த வைகையராக்களை செய்வது அடிபடுகிறவனை கோபம் அடைதான் செய்யுமே ஒழிய அவனுக்கு செய்யும் நன்மை ஆகவே ஆகாது.

உயிரை பற்றியும், மக்களாட்சி முறையை பற்றியும் பேசும் அனைவரையும் ஒன்று கேட்கிறேன். மக்களாட்சி உள்ள எந்த நாட்டில் இராணுவம் இல்லை. அப்படி இராணுவத்தில் உள்ளவர்கள் நடவடிக்கைகளில் கொல்லப்படுவது இல்லையா. அப்படி கொல்லப்படும் இராணுவத்தினர்களுக்கு சொந்த பந்தங்களும் ஆசா பாசம் இல்லையா. அல்லது இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் அரசு கொன்றால் அந்த கொலை கொலை இல்லையா. கார்கில் போரிலும், பங்களா தேசத்து எல்லை, அசாமிலும், காசுமீரத்திலும் நாளுக்கு நாள் எத்தனை வீரர்கள் கொல்ல படுகிறார்கள்......

நீதியின் பெயரால் நீதி கேட்க்கும் அந்த பத்திரிக்கைகளும், பதிவர்களும் இதை சார்ந்து வாய்திரப்பாது இருப்பது ஏன் விளக்க முடியுமா. அனைத்து உயிர்களும் ஒன்றே, அது போராளியாக இருந்தாலும் சரி, இராணுவமாக இருந்தாலும் சரி, பொது மக்களாக இருந்தாலும் சரி. புலிகளின் தாக்குதல் எப்பவுமே இராணுவ முகாமாகத்தான் இருக்கிறது. ஆனால் சிங்கள இராணுவம் தான் பொது மக்களாக பார்த்து பார்த்து தாக்கி கொண்டு இருக்கிறது. நேர்மையும், நீதியும் கொண்டவர்களே பதில் சொல்லுங்கள்.

Saturday, October 27, 2007

ஐன்சுடைனின் கடவுள் பற்றிய கருத்து.

ஐன்சுடைன் ஒரு மிக சிறந்த அறிவியலர், அவரது கருத்துகளை அவ்வப்போது எடுத்து உதாரணமாக ஆளுவது வழமை. அப்படி அவரது கடவுள் நம்பிக்கையை பற்றி பேசும் போது ஆத்திகர்களால் சொல்லப் பட்டு வந்த கருத்துகளுக்கு முற்றிலும் மாறாக இருக்கும் ஐன்சுடைனது கருத்துகளை காண நேர்ந்தது. அதை வலை மக்களோடு பகிர்ந்து கொள்ளும் பொருட்டு பதிவிடுகிறேன். இனி அவரது கருத்துகள்......

திரும்ப திரும்ப என்னுடைய மத நம்பிக்கையை பற்றி தவறாகவே படித்து வருகிறீர்கள், அது ஒரு பொய். கடவுள் ஒரு நபராக இருக்கும் சாத்தியம் இல்லை என்று மறுப்புக்கு இடம் இல்லாமல் தெரிவித்திருக்கிறேன். எனக்குள் இருக்கும் சில உணர்வுகளை மத உணர்வுகள் என்று சொன்னால் அது அறிவியலால் விளக்க முடியாமல் இருக்கும் வியத்தகு உலகின் அமைப்பு என்று சொல்லாம் என்று உரைகிறார். மதம் இல்லா அறிவியல் ஒரு முடம் என்றும் அறிவியல் இல்லா மதம் ஒரு குருடு என்றும் சொன்னவரும் அவரே.

இப்படி சொல்லுவதால் அவர் சொல்லுவதை அவரே மறுக்கிறார் என்று பொருளா? இந்த இரண்டு வாங்கியங்களையும் எடுத்துக்கொண்டு இரு சாராரும், அவர் உண்டு என்று தான் சொல்லுகிறார், இல்லை என்று தான் சொல்கிறார் என்று வாதத்திற்கு எடுத்து கொள்ளலாமா என்றாலும் இல்லை. மதம் என்ற வார்த்தைக்கு இது வரையில் சொல்லிவந்த பொருள் இல்லாமல், ஒரு புதிய விளக்கத்தை கொடுக்கிறார். இயற்கைக்கு அப்பாற்பட்டதாக சொல்லப்பட்டு வரும் மதமும் ஐன்சுடைன் சொல்லும் மதம் ஒன்று அல்ல. இதை தான் இயற்கைக்கு அப்பாற்பட்டதாக சொல்லப்படும் கடவுள் மயக்கத்தை விமர்சனம் செய்யும் பொருட்டு மேலே சொன்ன வாசகங்களில் ஐன்சுடைன் விளக்குகிறார்.

ஒரு நபருக்கு இருப்பதை போல இயற்கைக்கு ஒரு நோக்கமோ அல்லது ஒரு இலக்கோ இருக்க வாய்பு இல்லை. எனக்கு தெரிந்த வரை இயற்கையை முழுமயாக நம்மால் விளக்கி சொல்ல முடியவில்லை அதனால் இயற்கையையும் கட்டுப்படுத்தும் ஒரு நபரை மனம் சிந்திப்பது இயல்பு. அல்லது இயற்கையே அப்படி எந்த ஒரு வகைதொகைக்கும் அப்பாற்பட்ட ஒரு நபராக சிந்திப்பதும் இயல்பு. இப்படி எல்லாம் சிந்திபது ஒரு மத நம்பிக்கை, இந்த நம்பிக்கையில் புனிதம் என்ற சொல்லுக்கு எந்த வேலையும் இல்லை. இது தான் எனது மத நம்பிக்கை, ஆத்திகரின் வழியில் சொன்னால் நான் ஒரு மத நம்பிக்கை அற்றவன். சுருக்கமாக சொன்னால் ஆத்திகரின் கடவுள் என்ற ஒரு எண்ணதிற்கும் என்னக்கும் எப்பவுமே சம்பந்தம் இருந்தது இல்லை.

இப்படி கருத்துகளை ஐன்சுடைன் அமெரிக்காவில் குடியேறிய பிறகு தெரிவித்திருந்தார். அதற்கு ஒரு ரோமன் கத்தோலிக வழக்குரைஞர் உலக ஆத்தீக மக்களின் சார்பாக கீழ்கண்ட கடிதத்தை எழுதுகிறார்.

கடவுளை ஒரு நபராக கருதவோ அல்லது உருவக படுத்தவோ முடியாது என்ற உங்களுது கருத்துக்கு மிகவும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துகொள்கின்றோம். இட்லர் செர்மேனியில் இருந்து உன்னையும் உனது கருத்தகளையும் யூதர்களையும் வெளியேற்றியது ஏன் என்று இந்த 10 ஆண்டுகளாக விடை தேடிய மக்களுக்கு, இட்லரின் செயக்கு காரணம் இருக்க வேண்டும் என்ற கருத்துக்கு இடம் இல்லாமல் போகவில்லை. இந்த கருத்தால் அனைத்து அமெரிக்க மக்களின் வெறுப்பையும் கொண்ட உனது பேச்சுரிமையை பறிக்கப்பட வேண்டும் என்று எழுதினார்.

பாவம் ஐன்சுடைன், இந்த கடிதத்தை படித்த அவரின் மனது அமெரிக்கவில் குடியேறியமைக்கு எவ்வளவு வருந்தி இருக்குமே கடவுளுக்கே வெளிச்சம். ஐன்சுடைனுக்கே இந்த கதி என்றால், பெரியாரின் வழித்தோன்றல்களை வலையில் விமர்சிக்கும் விமர்சனம் எல்லாம் சாதாரணமே.

Friday, October 26, 2007

காணாமல் போன 6.6 பில்லியன் பணத்தை தேடி கண்டுபிடித்தது சிங்கள இராணுவம்.

அனுராதபுர தாக்குதலில் காணாமல் போன 6.6 பில்லியன் பணத்தை சிங்கள இராணுவம் கடமையாக தேட ஆரம்பித்தது. அங்க்கு வந்திருந்த 21 பேரில் யார் எடுத்து வைத்திருப்பார்கள் என்று அவர்களுக்கு தெரியவில்லை. அதனால் எல்லோரிடமும் சோதனை நடத்தவேண்டும் என்று முடிவு கட்டி ஒவ்வோருவராக எடுத்து வந்து தேட ஆரம்பித்தார்கள்.

முதலில் அவர்கள் கொண்டு வந்திருந்த துப்பாக்கி பைகளிலே மற்றும் இதர சுமைபைகளில் சோதனை நடத்தினார்கள். 6.6ல் ஒரு நயா பைசாவைக்கூட காண முடியவில்லை. பிறகு ஆங்காங்கே சிதறி கிடக்கும் வான் கலங்களில் ஏதும் இருக்குமோ என்று எரிந்து முடிந்திருந்த கலங்களில் சோதனை மேற்கொண்டனர்.

அங்கேயும் இங்கேயும் என்று தேடி எங்கேயும் அந்த 6.6 பில்லியன் பணம் இல்லை. பிறகு தனது கட்டளையகம் தொடர்பு கொண்டு தெரிவித்தனர். கட்டளையகமோ வந்தால் பணத்தோடு வாருங்கள் இல்லை என்றால் அப்படியே ஓடிவிடுங்கள் என்று கூறினார்கள் போலும்.

விரக்தியின் பிடியில் ஆட்பட்ட படையினர், எப்படியும் பணத்தை எடுத்துக்கொண்டு தான் போக வேண்டும் என்று விட்ட இடத்தில் இருந்து மறுபடியும் தேட ஆரம்பித்தனர். சுமாராக ஒரு 5 அல்லது 6 மணி நேரம் தேடியும் அந்த பணம் எங்க்கேயும் கிடைக்கவில்லை.

அப்போது தான் அவர்களுக்குள் இருந்த ஒரு அறிவாளி கூறினான், நாம் எவ்வளவு தேடினோம் எங்கே எங்கே தேடினோம் என்று அவர்களுக்கு தெரியாது மக்களுக்கும் தெரியாது. அதனால் நாம் கடினமாக தேடியதை அனைவருக்கும் சாட்சியோடு தெரிவிக்கவேண்டும் என்று.

அவன் சொன்னது அந்த தேடும் குழுவில் உள்ள அனைவருக்கும் சம்மதம் தெரிவிக்க, சாட்சிகளோடு புறப்பட்டார்கள் முகாம் நோக்கி. வழியிலே தோன்றியவர்கள் அனைவருக்கும் தாங்கள் எவ்வளவு கடினமாக தேடினோம் என்று விளக்கமாக விவரித்தபடி சென்றார்கள்.

வழியில் போவோரும் வருவோருக்கும் மட்டும் சமாதானம் சொன்னால் எப்படி என்று தெரிந்தவர்களுக்கும், அறிந்தவர்களுக்கும் பத்திரிக்கை மூலமும், மின்னஞ்சல் மூலம் தனது பக்கம் உள்ள நீதியை சிங்கள இராணுவம் எடுத்து சொல்லியுள்ளது.

ஆமாம் அந்த 6.6 பில்லியன் பணம் காணாமலேயே தான் போய்விட்டது. எங்கே போனது என்று யாருகுமே தெரியவில்லை. இதை படிக்கும் மக்களே உங்களது ஊர்களில் ஏதும் செத்த பாம்புகளை அகற்றவோ, காணாமல் போன பணத்தை தேடவோ வேண்டும் என்றால் சிங்கள இராணுவத்தை தொடர்புக்கொள்ளவும். அந்த ஒன்றும் அறியா அப்பாவி இராணுவத்தினர் வந்து தோடிக்கொடுத்து ஊழியம் புரிவார்கள். இவர்களது சேவையை பாராட்டி நொபேல் பரிசு கொடுத்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை, வெட்க்கம் கெட்ட உலகம் இது.

Saturday, October 20, 2007

வாழ்த்துவோம் இந்திய அணியை 20 - 20 வெற்றிக்காக.



166 ஓட்டங்களை மட்டுமே கொடுத்தற்கு முதலில் பாராட்டுகள். பிறகு தொக்கி தொக்கி நிற்காமால் நேராக இலக்கு நோக்கி ஆடிச்சென்றதையும். எதிரிலே ஆள் வெளியேரினாலும் என்ன என்று அடித்தாடிய இளம் வீரர்களுக்கு வாழ்த்துகள். மறுபடியும் ஒரு முறை அணிக்கு புதிய இளம் இரத்தத்தின் அவசியத்தை புரியவைத்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள்.

கடவுள் உண்டு இல்லை மனது, கணக்கு இடிக்குதே.

கடவுள் இல்லை என்று சொன்னால் நம்பிக்கை கொண்டோரின் மனது புண்ணாகும் போது, கடவுள் உண்டு என்று சொல்வதோடு மட்டும் இல்லாமல் இன்ன பிற காரியங்களை திருப்பி திருப்பி செய்து கொண்டும் இருந்தால் கடவுள் இல்லை என்று சொல்லுபவர்களின் மனது புண்படாதா. அல்லது அவர்களுக்கு இருப்பது மனதே இல்லையா. கணக்கு எங்கோ இடிக்கிறதே, சும்மா ஒரு வாதத்திற்கு கேட்போமே.

Thursday, October 18, 2007

ஸ்ரீவித்யா முதலாம் ஆண்டு நினைவு நாள்


உனது நினைவாய் நாங்கள்


உன்னை நோய்க்கும் தீய்க்கும் கொடுத்து
முடிந்தது ஓராண்டு

தனிமை போராட்டாம் நோயில் முடிந்து
பின் மரணத்தில்

இருந்த வரை உன்னை அழவைத்தது திரை
இப்போது நாங்கள்

கண்ணீரை பார்க்கவே பொருக்கவில்லை அன்று,
அதற்கும்கூட வழியில்லை

வாழ்கை போராட்டம் பொதுவாக, உனக்கோ
போராட்டமே வாழ்க்கை

இப்போதாவது சிரித்தாயே துன்பத்தை பார்த்து
அதுவே கடைசியாய்

இயற்கையயா விதியையா கடவுளையயா யாரை
நான் சபிக்க

அந்த ஒரு சிரிப்புக்காக அனைத்தையும்
மன்னித்து விடலாம்

இனி இருக்கும் காலத்துக்கும் என்ன
செய்யப்போகிறோம் நாங்கள்

என்னை போல் எத்தனை அனாதைகளை
விட்டு சென்றாயோ

தாயே தாங்கவில்லையே மனது, நின்றுவிடாதா
விதியின் பசி

நீயே இல்லை, இனி என்ன
நடந்தால் எனக்கென்ன.

Wednesday, October 17, 2007

இராமன் சீதை



ஆண்டாண்டு காலமாய் சீதையை தேடிய இராமன், கடைசியாக அவள் இருக்கும் இடம் தெரிந்ததும் அவளிடம் நோக்கி புறபட்டான். உடன் உள்ளோர் அனைவரை அழைத்துக்கொண்டு செல்லும் எண்ணம் அவனுக்கு இருந்தது. இருப்பினும் சீதை இருப்பதாக இருக்கும் இடம் உறுதி படுத்தப்பட்டதும் மற்றவர்களை அழைத்துக்கொள்ளும் திட்டத்தை தெரிவித்துவிட்டு புறப்பட்டான்.

நீண்ட நெடிய பயணத்திற்கு பிறகு அங்கு வந்தடைந்த அவர்கள் சற்றே இளப்பாரிவிட்டு மீண்டும் பயணிகலானார்கள். அப்படி இப்படி என்று ஒரு வழியாக வந்து செர்ந்த பிறகு. மற்றவர்களுக்கும் இந்த இடத்தை பற்றியும், வந்து சேரவேண்டிய நேரம் இடம் குறித்து தெரிவித்த இராமன் நாளைக்கு காலையிருந்து செய்ய வேண்டியவைகளை பட்டியலிட்டு உடன் வந்திருந்தவர்களிடம் வேலைகளை பிரித்து ஒப்படைத்துவிட்டு சற்று அயர்ந்தான்.

வேலைகளை பெற்றுகொண்டவர்கள், செயல் திட்டங்களை எப்படி நிறைவேற்றுவது என்று அவர்களுக்குள் பேசி உறுதி படுத்திக்கொண்டார்கள். நாளையை நினைத்து அனைவரும் உறக்கம் இல்லை தான். இருந்தாலும் அனைவரும் கண்களை மூடியவண்ணம் ஒரு தவமாக படுத்து இருந்தார்கள்.

நாடு விட்டு நாடு போகவேண்டிய தயாரிபானதால், பயண ஏற்பாட்டில் வரும் சிக்கள்களை களைந்தெரியவும். அங்கே அத்தனை மக்களையும் அழைத்து போக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அனைவரும் சேர்ந்து முடித்து அனைவரும் கிளம்பி வந்துக்கொண்டு இருந்தார்கள்.

அதிகாலையிலே அனைவரும் தயாரானார்கள். இராமனது தலைமையில் அவர்கள் அனைவரும் புறப்பட்டார்கள். இராமனது சார்பில் மறைந்திருந்து செய்திகளை சேகரிக்க சென்றவனிடம் இருந்து சேதி வந்தது. இவர்கள் அந்த மறைவிடன் நோக்கி பயனிகலானார்கள். மிகவும் அருகாமையில் இருக்கும் இடமாக இருந்தாலும் தகுந்த பாதுகாப்புடனும், எந்த சல சலப்புக்கும் இடமில்லாமல் அவர்கள் முன்னேருவது கடினமாத்தான் இருந்தது.

ஒருவழியாக மறைவிடத்திற்கு வந்தவர்கள், அங்கே இருந்தவனும் இவர்களை அழைத்து சென்று சீதை இருக்கும் இடத்தினை காண்பித்தான். பார்வைக்கு தெளிவாக தெரியவில்லை என்றாலும் சீதையை அவர்களுக்கு அடையாளம் தெரிந்தது.

இத்தனை ஆண்டுக்கு பிறகு பார்க்கும் இராமனுக்கோ உருகுலைந்து, தோற்றமே மாறிபோய் இருக்கும் சீதையை பார்த்ததும் அவன் பட்ட துன்பம் சொல்லிமாளாதது. இராமனை அப்படியே இருக்கவிட்டு விட்டு ஆகவேண்டிய காரியத்துக்காக தயாரானார்கள் அனைவரும். அங்கே அமர்ந்த வண்ணம் இராமன், சீதை இருந்த இடத்தையே பார்த்தவனாக இருந்தான்.

மனதுக்குள் சீதையின் இனிய நினைவுகள், பாலைவனமாகி போன இதியத்தில் புதிய உணர்வுப்புணல். இத்தனை ஆண்டு காலம் மனதிலே தேக்கி வைத்திருந்த ஆசை, கேள்வி, இன்ன பிற எல்லாம் தானாகவே ஒரு ஓட்டமாக ஓட ஆரம்பித்தது இராமனுக்குள். நகரும் ஒரு ஒரு நிமிடமும் அவனுக்கு உகம் உகமாக சென்றுக்கொண்டு இருந்தது. இங்கு வர புறப்பட்டவர்கள் எல்லாம் நாளைய காலையில் தான் இங்கு வந்தடைவார்கள், அது வரை இவர்களால் எந்த நடவடிக்கையுிம் மேற்கொள்ள முடியாது. பொருமை காத்தான் இராமன்.

மறைவிடத்தில் இருந்து தங்குமிடத்திற்கு திறும்பினார்கள் அனைவரும் அமைதியாக. இப்படி ஒரு குழு அங்கு வந்து போனதையோ, கண்கானிப்பில் ஈடு படுவத்தையோ சீதையோ, அங்கு இருப்பவர்களும் அறியமாட்டார்கள். இன்னமும் ஒரு பொழுது கழிந்துவிட்டால் காலையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள போகிறார்கள், ஆனால் இராமனை போலவே அனைவருக்கும் ஒரு பதட்டம்.

இராமனுக்காக சீதையின் தரப்பில் இருந்து வந்து உதவும் விதமாக வந்திருந்தவர்கள் காலையில் அனைவரையும் அழைத்துக்கொண்டு சீதையின் இடம் நோக்கி சென்றடைந்தார்கள். இடத்தையும் அவர்களையும் தூரத்தில் இருந்து காண்பித்துவிட்டு அவர்கள் சென்று மறைந்தார்கள்.

திடீர்ரென தோன்றிய அனைவரையும் பார்த்த சீதை கல்லாக உறைந்தாள், இராமனை ஏறேடுத்துப்பார்க்கவும் அவளுக்கு சக்தி இல்லைதான். சீதையும் இராமனையும் விட்டு விட்டு அனைவரும் விலகி சென்றார்கள். ஆண்டாண்டு காலமாய் அழுது அழுது இனி அழுகையே எப்பவுமே வாரா என்று இருந்த விழிகளில் நீரோடுவதையும் கவனிக்க முடியாமல் பூமியை மட்டுமே பார்த்துகொண்டு இருந்தாள்.

அமைதியை கலைக்கும் விதமாக இராமன் கேட்டான் ஏன் சீதா இப்படி செய்தாய், நான் இல்லாத நேரத்தில் ஊர்கலவரத்தில் உனக்கு அப்படி நேர்ந்ததால் உன்னை விட்டு ஓடி விடுவேன் என்று நினைதாயா என்றான் மேலும். அது வரையில் அமைதிகாத்தவளால் அதற்கு மேலும் முடியவில்லை. அவனது கைகளை பிடித்துக்கொண்டு அழுதுதீர்த்தாள் வாய்விட்டு.

அழுகைக்கு அப்பால் எவ்வளவோ பேசினார்கள் இராமனும் சீதையும், கடைசியாக சீதை சொன்னாள் என்னால் ஊரில் வந்து உங்களோடு வாழ முடியாது. அதுவும் ஊர் என்னை பற்றி என்ன பேசினாலும் பரவாயில்லை உங்களை பேசுவதை எனது காதால் கேட்க்கமுடியாது என்று உறுதியாக முடித்தாள்.

பதிலுக்கு இராமனும், அப்படி என்றால் ஊரை அங்கேயே விட்டு விட்டு இங்கேயே வாழ்ந்துவிட்டால் போகிறது என்றான். பதிலுக்கு எவ்வளவு தான் வாதாடினாலும் கடைசியில் வாதத்தில் தோற்று போனாள் சீதை. சீதையும் இராமனையும் மறுபடியும் ஒரு புது குடித்தனம் அமைத்துவிட்டு சென்றார்கள் இராமனது நண்பர்களும், சீதையது நண்பர்களும் மன நிறைவாக அமெரிகாவில் இருந்து இந்தியாவை நோக்கி.

Sunday, October 14, 2007

சோ இராமசாமியால் மட்டும் எப்படி இப்படி பேச முடிகிறது

குமுதம் இனைய இதழில் சோ அவர்களி பேட்டியை வைத்துள்ளார்கள். கேள்வி பதில் நிகழ்சியான அதில் 2 கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் அவர் இப்படி பதில் தருகிறார்.

1) தமிழை எல்லா கல்வி நிலையங்களிலும் 1 முதல் அனைத்து வகுப்பிற்கும் கட்டாயா மொழிப்பாடமாக வலியுருத்தும் சட்டம் வடிவமைக்கபட்டு செயல்படுத்தவுளது இதை பற்றி என்ன சொல்லுகிறீர்கள் கேள்விக்கு அவர், குழந்தைகளுக்கு இது அதிக சுமை, அவர்களுக்கு ஏற்கனவே அதிகம் படிக்க வேண்டிய கட்டாயம் இதில் இந்த மொழிபாடத்தை வேறு படிக்கவேண்டுமா இது அவரது பதில்.

2) இந்தி மொழியை பற்றி குறிப்பிடும் போது, அந்த மொழியை படிக்கமுடியாமல் செய்துவிட்டது அரசு. தமிழகம் தவிர அத்துனை மா நிலமும் படிக்கிறது இங்கே படிக்கமுடியாமல் செய்து விட்டார்கள், தவறான மொழிக்கொள்கை என்று குறிப்பிட்டார் அடுத்த 2 நிமிடங்களில்.

தமிழ் குழந்தைகளுக்கு அதிக சுமையாக அமையும் போது அதும் வீட்டிலும், வெளியிலும் எங்கும் பேசும் மொழியை, ஒரு மொழிப்பாடமாக படிக்கும் போது சுமையாக தெரியும் என்று சென்னவர், இந்தி மொழியை பள்ளியில் படிக்கமுடியாமல் செய்துவிட்டார்கள் என்றும், இன்னமும் அதிக கடிதங்கள் இதை பற்றி அவரது அலுவலகத்துக்கு வருவதாகவும் சொல்கிறார்.

எனக்கு அவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை, உங்களில் யாருக்காவது புரிந்தால் சொல்லவும்.

Saturday, October 13, 2007

ஏ ஆர் ரகுமானின் இசை ஆலிவுட்டில் திருட்டு


லார்டு ஆப் தி வார் என்று ஒரு ஆங்கிலப்படம், உலக தீவிரவாதிகளுக்கு ஆயுதம் வாங்கித்தரும் ஒரு தரகனின் கதையை படமாக கொண்ட படம் அது.

இதிலே கதையின் நாயகன், ஒரு ரூசிய சரக்கு விமானம் முழுவதும் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு ஆப்ரிக நாட்டிற்கு போகும் வேளையில் இன்டர்போல் அலுவலர்கள் அதை மோப்பம் பிடித்து அவனை கையும் களவுமாக பிடிப்பதற்கு ஆப்ரிகா பறந்து வருவார். அப்போது போர்விமானத்தின் உதவியுடன் இவனது விமானம் தரையிறங்க வைப்பார்கள்.
அப்படி இறங்கிய விமானத்தில் இருக்கும் ஆயுதங்களை வழிப்போக்கர்களிடன் எல்லாம் கொடுத்து எடுத்துப்போங்கள் என்று இன்டர்போல் வரும் முன் கொடுத்து அனுப்பிவிட்டு உனக்கும் பெப்பே உங்க அப்பனுக்கும் பெப்பே காட்டிவிட்டு சிரிப்பான். பதிலுக்கு அவர்கள் மாட்டுவடீ இன்னைக்கு இல்லனா என்ன வேற என்றக்காவது மாட்டாமலா போவாய் என்று கேட்டுவிட்டு போவார்கள்.
இந்த இடத்தில் தான் ரகுமானது இசையை பின்னனி இசையை அங்கு பின்னனியில் சேர்த்து இருப்பார்கள், அதுவும் எந்த இசை தெரியுமா, பம்பாயில் கலவரங்கள் வந்து ஓயும் போது ஒரு கருத்திசை வந்து வந்து போகும் அனேகமாக படம் முழுவதும். அந்த இசையைத்தான் இங்கே ரகுமானின் பெயரை அந்த படத்தின் தளத்திலே வேறு எங்கேயுமே கானும். கண்டிப்பாக இது ஒரு இசை திருட்டேதான். படம் வந்தது 2005இல் இன்னமும் இது பற்றி எங்கேயும் பேசாமலும் கண்டிகாமலும் இருப்பது வியப்பாக இருக்கிறது. இனிமேல் யாரும் ரகுமானின் படல் அங்கே கேட்டமாதிரி என்றெல்லாம் இனிபேசி அலய வேண்டாம்.

Tuesday, October 2, 2007

உச்ச நீதிமன்ற தீர்ப்பும் அது தரும் படிப்பினைகளும்.

என்ன நடக்கிறது இந்தியாவில், இருப்பது இந்தியாவிலா அல்லது பாக்கிஸ்தானிலா!. காவிரியில் நீர் திறந்துவிட சொல்லி உச்ச நீதிமன்றம் கர்னாடகத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் கர்னாடகமோ ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கலாகாது என்று அதன் முதல்வரும், நீதி மன்றத்தின் உத்தரவிக்கு அடிபணியக்கூடாது என்று அதன் எதிர்கட்சி தலைவர்கள் சொன்னார்கள் சொன்ன படியே நடந்தும் வருகிறார்கள் ஆண்டாண்டு காலமாக.

டான்சி நில வழக்கு ஊழலிழ் உச்ச நீதிமன்றம், அப்போதைய முதல்வரை மன்னித்து அவர் செய்த தவறுக்கு திருந்துதல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது, அத்தனை சாட்சியங்களும் முதல்வருகு எதிராக நிரூபிக்கபட்ட பிறகு.

ஒரே கையேழுத்தில் ஒரு இலச்சத்திற்கும் மேலானா அரசு ஊழியர்கள் வீட்டிற்கு அனுப்பட்ட உத்தரவினை தடை செய்யவேண்டும் என்று எதிர்கட்சிகள் நடையாய் நடந்தும், சிதம்பரமும், அவரது துணைவியார் நளினி சிதம்பரமும் கிட்டதட்ட 2 வாரங்க்களுக்கு மேல் வாதாடியும் எப்படி தீர்ப்பு அமையுமோ என்று ஏங்கி தவித்தபின் மறுபரீசீலனை செய்ய அரசை கேட்டுக்கொண்டது உச்ச நீதிமன்றம்.

பம்பாய் தொடர் வெடிகுண்டு வழக்கில் தடா நீதிமன்றத்தில் தண்டனை பெற்றவுடன் சிறையில் அடக்கபடும் முன்னரே உச்ச நீதிமன்றத்தில் அவனுக்கு பிணையவிடுப்பு அதுவும் எதற்கு தண்டனையின் நகல் அவரது மொழியில் மொழிபெயர்த்து கொடுக்க அவருக்கு தீர்ப்பு என்ன என்று விளங்கவில்லையாம், ஐயோ பாவம்.

பாபரின் மசூதி இடிக்கப்பட்டு இத்தனை ஆண்டுகள் முடிந்தும் அந்த வழக்கை விசாரிக்கவும் இல்லை, மேலும் அந்த இடிப்பு யாரால் நடத்தப்பட்டது என்று அமெரிக்கவில் உள்ளவனுக்கு கூட தெரியும் ஆனால் உச்ச நீதி மன்றத்துக்கு தெரியாமல் போய்விட்டது பாவம்.

ஆயிரம் ஆயிரம் கோடியாக பொதுமக்களின் பணத்திலே ஒரு பண சாம்ராஜியம் அமைத்தான் அர்சத்து மேத்தா, அதை விசாரித்த நீதிமன்றம் சாட்சிகள் சரிவரை நிரூப்பிக்க முடியாததால் அவனையும் விடுவித்தது.

முத்திரைத்தாள் மோசடி மன்னன் வழக்கு இன்னமும் ஆண்டாண்டு காலமாக விசாரணையிலே உள்ளது, வழக்கை விசாரிக்கவும் இல்லை ஏன் என்றும் கேட்க்கவும் இல்லை.

முன்னால் பிரதமர் பி வி நரசிம்மா ராவ் மீது எண்ணிகை தெரியாத அளவிற்கு வழக்குகள் இருந்தது. வழக்கு தொடுத்தவும் இறந்து அவரும் இறந்த பிறகும் இன்னமும் அந்த வழக்குகள் நிலுவையிலே தான் உள்ளது.

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் அத்தனை உண்டு......

ஆனால் இவைகளுக்கு எல்லாம் கவலை பட்டாத நீதிமன்றம் தமிழகத்தில் நடந்த கடையடைப்பை நடத்தக்கூடாது என்று இரவோடு இரவாக ஒரு தீர்ப்பும், அதோடு மட்டும் நிர்க்காமல் அடுத்த நாள் கடையடைபு நடந்தது என்று இவர்கள் சொல்ல, நீதிமன்றமோ ஆட்சியை கலைத்தால் என்ன என்று கேட்கிறது. அதன் கேள்விகள் தமிழகத்திலே சட்டதின் ஆட்சிதான் நடக்கிறதா என்ற விகடம் வேறு.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி பார்த்தால் தமிழகம் தவிர வேறு எந்த மாநிலம் எதும் செய்யலாம் தவறில்லை ஆனால் தமிழகம் செய்தால் தவறு அதும் கருணாநிதி அரசு செய்தால் தவறு ஆட்சியை கலைக்க வேண்டும். ஜெயலலிதா ஆட்சியின் போது எது நடந்தாலும் நிலத்தை திருப்பிக்கொடுதால் மட்டும் போதும்..............

திரைபடங்களில் காவலர்களையும், நீதிபதிகளையும் பல படங்களில் கோமாளிகளாக காட்டும் போது கோபமாக வரும், ஆனால் அவர்கள் காட்டுவது சரிதான் போல, இந்த் தீர்ப்பை பார்க்கும் போது.

ஆமாம் மக்களின் தேவைக்காக நீதிமன்றம் செல்லாத அதிமுக இந்த கடவுள் சங்கதியில் மட்டும் தட்டவேண்டிய இடம் பார்த்து தட்டி காரியம் சாதிக்கும் மாயம் என்ன கடவுள் தான் தெரிவிக்க வேண்டும்.